பணிக்கு திரும்ப மம்தா வேண்டுகோள்

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (8)
Advertisement
கோல்கட்டா, மம்தா, மருத்துவர்கள், பணி, நோயாளிகள், நலன், வேண்டுகோள்

கோல்கட்டா : நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா வலியுறுத்தி உள்ளார்.
மேற்கு வங்கத்தில் டாக்டர்கள் தாக்கப்பட்டது குறித்து அவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மருத்துவர்களின் கோரிக்கைளை நிறைவேற்றினால் மட்டும் போராட்டத்தை கைவிடுவோம் என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். மருத்துவ துறையில் இருப்பவர்கள் இவ்வாறு செய்வது ஏற்புடையதல்ல. போராட்டம் தொடர்பாக யாரையும் கைது செய்ய மாட்டோம். போலீஸ் நடவடிக்கையும் இருக்காது. தாக்கியவர்களின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கு வங்கத்தில் மருத்துவர்களின் கோரிக்கைகளை ஏற்றபோதிலும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. மேலும் தாக்கப்பட்ட மருத்துவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே ஏற்கும். மேற்கு வங்கத்தில் மருத்துவ சேவையில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் மம்தா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Uthiran - chennai,இந்தியா
16-ஜூன்-201913:21:53 IST Report Abuse
Uthiran சிங்கம் போல் இருந்த மம்தாவை இப்படி கதற விட்டுட்டாங்களே.
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
16-ஜூன்-201911:16:03 IST Report Abuse
vasanthan நீ தான் தைரியமான பொம்பளையாச்சே மருத்துவர்கள் மேல கைய வச்சி பாரேன்.
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
16-ஜூன்-201911:07:55 IST Report Abuse
vasanthan வாங்க எலி புல்லு திங்குது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X