தமிழக திட்டங்களுக்கு நிதி தாருங்கள்: இபிஎஸ்| Dinamalar

தமிழக திட்டங்களுக்கு நிதி தாருங்கள்: இபிஎஸ்

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (17)

புதுடில்லி: டில்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் இ.பி.எஸ்., டில்லியில் நிருபர்களிடம் பேசினார். தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களுக்கான நிதியை உடனடியாக வழங்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.






மேலும் முதல்வர் நிருபர்களிடம் கூறியதாவது: மேகதாது அணை கட்ட கர்நாடக மாநிலத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும். நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை நிறைவேற்றவும், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும், காவேரி கோதாவரி இணப்பு திட்டத்தை நிறைவேற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.





பருவமழை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ள உதவிகள் கோரிக்கை, சென்னையில் நிரந்தர வெள்ளத்தடுப்பு திட்டம், வெள்ளத்தடுப்பு நிதியாக ரூ7000 கோடி வழங்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை போக்க நிதி வழங்கவும், கன்னியாகுமரியில் இந்திய கடற்படை தளம் அமைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் இபிஎஸ் கூறினார். தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக பிரதமரும், மத்திய அமைச்சர்களும் உறுதி அளித்தனர் என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X