பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 இதே நாளில் அன்று

ஜூன் 16, 1924டி.ஆர்.மகாலிங்கம் : மதுரை மாவட்டம், சோழவந்தானை அடுத்துள்ள, தென்கரை என்ற ஊரில், 1924 ஜூன் 16ல் பிறந்தவர், மகாலிங்கம். இளம் வயதில், படிப்பில் நாட்டமில்லாததால், செல்லுார், சேஷ அய்யங்காரிடம், மிருதங்கமும், பாட்டும் கற்றார். நாடகத்தில் நடித்தவரை, ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், தன்னுடன், சென்னை அழைத்து வந்து, நந்தகுமார் படத்தில் நடிக்க வைத்தார். அப்போது, மகாலிங்கத்திற்கு, 12 வயது! கடந்த, 1945ல் வெளிவந்த, ஸ்ரீவள்ளி படத்தில், முருகனாக நடித்தார். படம், 52 வாரங்கள் ஓடி, வசூலை அள்ளி குவித்தது. குரல் வளத்தில், எல்.ஜி.கிட்டப்பாவின் வாரிசாக கொண்டாடப்பட்டார்.

திரைப்பட தயாரிப்பில் இறங்கி, கையை சுட்டுக் கொண்டவர், நாடக மேடைக்கு திரும்பி, பெரும் புகழை மீண்டும் பெற்றார். கவிஞர் கண்ணதாசன், மாலையிட்ட மங்கை படத்திற்கு, அவரை, மீண்டும் திரையுலகிற்கு அழைத்து வந்தார். 1978 ஏப்., 21ல் காலமானார். 'செந்தமிழ் தேன்மொழியாள், இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை' போன்ற பல பாடல்களின் வழியே, தமிழர்களிடம் வாழ்ந்துக் கொண்டிருக்கும், டி.ஆர்.மகாலிங்கம், பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
22-ஜூன்-201918:21:46 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இப்போதும் அவர் தன் குரலில் உள்ள பாடலை சொல்லாத நாளில்லை மறக்கவே முடியாது
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஜூன்-201907:46:52 IST Report Abuse
Bhaskaran சொந்தப்படங்கள் எடுத்தும் சினிமா நடிகையுடன் சுற்றியும் தன் செல்வாக்கை இழந்தவர் இவர்
Rate this:
Share this comment
Cancel
Balakrishnan Gurumurti - Boston MA,யூ.எஸ்.ஏ
16-ஜூன்-201905:53:35 IST Report Abuse
Balakrishnan Gurumurti உண்மையிலேயே திறன் கொண்ட நடிகர் என்பதில் சந்தேகமா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X