பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை இயக்கங்கள் கூட்டமைப்பு

Added : ஜூன் 15, 2019
Advertisement
 பசுமை இயக்கங்கள் கூட்டமைப்பு

சிதம்பரம்: சிதம்பரத்திலுள்ள திருப்பணந்தாள் காசி மடத்தில், பசுமை இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அழிவின் விளிம்பிலுள்ள நாட்டு குமட்டி பழத்தாவரத்தை மீட்டெடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. பாரம்பரிய சித்த வைத்திய சங்க தலைவர் கருணாமூர்த்தி தலைமை தாங்கினார். கெட் பசுமை அமைப்பின் தலைவர் சரவணன், இயற்கை வாழ்வியல் ஆலோசகர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன், ஹாஜி, சிவப்பிரகாசம், பெறியாளர் ராஜா, சத்தியபாணி, குபேரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பசுமை கூட்டமைப்பின் தாவரவியல் ஆலோசகர் இளங்கோவன் பேசுகையில் 'அழிந்து வரும் மண் சார்ந்த காய்கறிகள், தாவரங்களை பாதுக்காப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிய வகை நாட்டுத்தாவரமான நாட்டு குமட்டிப்பழம், தர்ப்பூசணி போல் இருக்கும்.தற்போது புழக்கத்தில் உள்ள தர்பூசணி தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. இந்த பழத்தை உட்கொண்டால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும்.ஆனால் குமட்டிப்பழம் சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும். எந்த தீங்கையும் ஏற்படுத்தாது. அழிந்து வரும் குமட்டி பழத்தாவரத்தை பாதுகாப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு குமட்டிப்பழம் மற்றும் விதைகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X