சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விருதை அருகே குடிநீர் கேட்டு மறியல்: சேலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

Added : ஜூன் 15, 2019
Advertisement

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே, 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்காததை கண்டித்து, கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால்,சேலம் சாலையில் 80 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் கிராமத்தில் குடிநீர் வழங்கிய போர்வெல் கடந்த 20 நாட்களுக்கு முன் பழுதானது.இதனால், கிராமத்தினர் அருகிலுள்ள பாசன மோட்டார்களில் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். போர்வெல் மோட்டாரை சீரமைக்க கோரிக்கை விடுத்தும் பி.டி.ஓ., நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், ஆத்திரமடைந்த கிராமத்தினர், நேற்று காலை 8:00 மணியளவில், விருத்தாசலம் - சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது, பி.டி.ஓ., வசந்தா, துணை பி.டி.ஓ.,க்கள் கண்ணன், சுகுமாறன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, 9:20க்கு மறியல் கைவிடப்பட்டது.இதனால், விருத்தாசலம் - சேலம் சாலையில் 80 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X