பதிவு செய்த நாள் :
மத்திய அமைச்சர்களிடம் முதல்வர் வேண்டுகோள்

'நிடி ஆயோக்' அமைப்பின் லோசனை கூட்டத்தில் பங்கேற்க நேற்று டில்லி வந்திருந்த தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்தார். அப்போது அ.தி.மு.க.வில் எழுந்துள்ள உட்கட்சி பிரச்னையில் தனக்கு உதவும்படி அவர் கோரிக்கை விடுத்ததாக தெரிய வந்துள்ளது.
புதிய தலைமைச் செயலர், டி.ஜி.பி., நியமனம் குறித்தும் மத்திய அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் அமைச்சர்களிடம் வலியுறுத்தினார்.
திட்டங்கள் அரசின் கொள்கைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனை அளிக்கும் 'நிடி ஆயோக்' கவுன்சிலின் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். உள்நாட்டு பாதுகாப்பு, நதிநீர் பிரச்னை, நீர் மேலாண்மை, வறட்சியை சமாளித்தல், விவசாயிகளின் மேம்பாடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் இரவே டில்லி வந்தடைந்தார்.
முதல்வரின் வருகை,அதன் பின்னணி குறித்து அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் நடந்த தே.ஜ. கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி டில்லி வந்திருந்தார். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்கவும் வந்திருந்தார். இந்த இரு பயணத்தின்போதும் துணை முதல்வர் என்ற அடிப்படையில் பன்னீர் செல்வமும் உடன் வந்திருந்தார். ஆனால் இந்த முறை முதல்வர் மட்டும் தனியாக வந்திருந்தார்.

இதனால் முதல்வரின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் முதல்வர் சந்தித்தார். அப்போது பிரதமருக்கு பட்டு சால்வை அணிவித்து மலர்கொத்து அளித்து கோரிக்கை மனுவையும் அளித்தார். பல மாநில முதல்வர்களும் பிரதமரை சந்திக்க வந்திருந்ததால் சில நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
அதன்பின் மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ. தேசிய தலைவர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரையும் அடுத்தடுத்து முதல்வர் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புகளின் போது தமிழக திட்டங்களுக்கான கோரிக்கை மனுக்கள் தரப்பட்டதாக கூறப்பட்டாலும் தமிழக அரசியல் கள நிலவரம் அறிந்தவர்களான இந்த அமைச்சர்களுடனான முதல்வரது சந்திப்பு முழுக்க முழுக்க அரசியல் ரீதியாகவே அமைந்தது. லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து இந்த சந்திப்பின்போது விரிவாக விளக்கப்பட்டது.

மேலும் அ.தி.மு.க.வுக்குள் தலைமை கோரிக்கை குறித்தும் உட்கட்சி பிரச்னை குறித்தும் பேசப்பட்டது. ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபமெடுத்தால் மத்திய அரசு தரப்பிலும் பா.ஜ. தரப்பிலும் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதுடன் உட்கட்சி பிரச்னைகள் மேலும் பெரிய அளவில் வெடிக்காத அளவுக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டுமென்றும் முதல்வர் தரப்பு கோரிக்கை விடுத்தது.
தமிழக சட்டசபையை கூடும்போது சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட தி.மு.க. மேற்கொள்ளப் போகும் நடவடிக்கை களுக்கு பதிலடி தந்து சமாளிப்பது பற்றியும் அந்த நேரத்தில் மத்திய அரசு காட்ட வேண்டிய கடைக்கண் பார்வை குறித்தும் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல் புதிய டி.ஜி.பி. நியமனம் மற்றும் தலைமைச் செயலாளர் தேர்வு முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேர் விடுதலை ஆகிய விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டன. இந்த சூறாவளி சந்திப்புகளின் தாக்கம் அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தில் எதிரொலிக்க கூடும். இவ்வாறு அந்த வட்டாரங்கள்

தெரிவித்தன.

மேகதாதுவுக்காக போட்டா போட்டி

கர்நாடக முதல்வரும், மதச் சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமியும் நேற்று டில்லி வந்திருந்தார். கர்நாடகாவில் மேகதாது அணையை கட்ட அனுமதி தரும்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சரும் பா.ஜ.வைச் சேர்ந்தவருமான கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் குமாரசாமி மனு அளித்தார். 'மேகதாது அணை கட்டுவதில் தாமதம் ஏற்படுவதால் கடுமையான வறட்சியையும், குடிநீர் பஞ்சத்தையும் கர்நாடகா சந்தித்து வருகிறது. எனவே அணை கட்டுவதற்கான அனுமதியை விரைந்து தாருங்கள்' என கர்நாடகா தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த தகவல் வெளியானதும் தமிழக முதல்வரும், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கை நேரில் சந்தித்து காவிரி விவகாரம் குறித்துப் பேசியதுடன் 'மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரக்கூடாது' என தன்பங்கிற்கு ஒரு கோரிக்கை மனுவை அளித்து விட்டு வந்தார்.


டில்லியிலும் ராஜ்யசபா குஸ்தி!

அ.தி.மு.க.வில் நடந்து வரும் ராஜ்யசபா 'சீட்' டுக்கான குஸ்தி முதல்வரின் பயணத்தின்போது டில்லியிலும் எதிரொலித்தது. முதல்வரை வரவேற்பதற்காக டில்லி விமான நிலையத்துக்கு வந்திருந்த லோக்சபா முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் எம்.பி. ஆரணி எழுமலை என பலரும் போட்டி போட்டு மலர்கொத்துக்களை அளித்தனர். டில்லி வந்து காத்திருந்த இவர்களுடன், முதல்வரின் விமானத்தில் உடன் வந்த முன்னாள் எம்.பி. நாமக்கல் சுந்தரமும் பூங்கொத்தை முதல்வருக்கு தந்து தன் இருப்பை வெளிப்படுத்தினார். இதைப் பார்த்த அ.தி.மு.க. வினர் 'ராஜ்யசபா சீட்டுக்கான குஸ்தி பலமாகத் தான் இருக்கும் போலிருக்கிறது' என முணு முணுத்தனர்.


- நமது டில்லி நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-ஜூன்-201918:14:41 IST Report Abuse

Pugazh Vதமிழக மக்கள் சர்ரியான பாடம் புகட்டி யும் உணராமல் திருந்தாமல், வருத்தமோ கோபமோ வராத திராவிடர் களைப் பார்த்து அதிசயமாக இருக்கிறது.

Rate this:
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
16-ஜூன்-201910:33:13 IST Report Abuse

தமிழ் மைந்தன்தமிழே சரியாக தெரியாத ஊழல்திமுக தலைவர் காங்கிரஸ் தலைவரிடம் ஹிந்தியில் பேசுவது போலவா அன்பு......

Rate this:
blocked user - blocked,மயோட்
16-ஜூன்-201908:06:22 IST Report Abuse

blocked user'கட்டாந்தரையில் அணை கட்டமுடியாது' என்ற உயர்ந்த திராவிட மத தத்துவத்துக்கு இணங்க திராவிடர்கள் ஓவராக கதறுகிறார்கள். 40 ஆண்டு திராவிடமத ஆட்சியில் வழக்குப் போடுவதைத்தவிர என்னதான் செய்தார்கள் என்று புரியவில்லை.

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X