பதிவு செய்த நாள் :
தீர்வு காண்பாரா?
காஷ்மீர் உட்பட பல பிரச்னைகளுக்கு அமித் ஷா...
கடும் நடவடிக்கைகள் எடுப்பார் என எதிர்பார்ப்பு

புதுடில்லி : மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமித் ஷா முன், ஜம்மு - காஷ்மீர் பிரச்னை, நக்சல் வன்முறை, சட்ட விரோத ஊடுருவல் உட்பட, பல பிரச்னைகள் வரிசை கட்டி நிற்கின்றன. பா.ஜ., தலைவராக சிறப்பாகச் செயல்பட்ட அமித் ஷா, உறுதியான மற்றும் கடும் நடவடிக்கைகள் மூலம், இந்த பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 காஷ்மீர்  பிரச்னைகளுக்கு அமித் ஷா  தீர்வு காண்பாரா?


அமித் ஷா, 2014ல், பா.ஜ., தலைவராக பொறுப்பேற்றார். அதற்கு முன் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., பெற்ற வெற்றிக்கு அமித் ஷா தான் காரணம் என, கூறப்பட்டது. குறிப்பாக, உத்தர பிரதேசத்தில், மொத்தமுள்ள, 80 தொகுதிகளில், 73 தொகுதிகளை, பா.ஜ., கைப்பற்றியதற்கு, அமித் ஷாவின் உழைப்பு தான் காரணம் என, பா.ஜ.,வினர் பெருமையுடன் கூறினர். கடந்த, 2014 லோக்சபா தேர்தலுக்கு பின் நடந்த, பல மாநில சட்டசபை தேர்தல்களிலும், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது.

வட கிழக்கு மாநிலங்களில், ஒரு தொகுதியில் கூட, பா.ஜ.,வால் வெற்றி பெற முடியாது எனக் கூறப்பட்ட காலம் போய், இன்று, வட கிழக்கு மாநிலங்கள், பா.ஜ.,வின் கோட்டையாக மாறிஉள்ளன. சமீபத்தில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அடைந்த மாபெரும் வெற்றிக்கு, பிரதமர் மோடியும், அமித் ஷாவும் தான் பெரிதும் காரணம். இரண்டாவது முறை, மோடி பிரதமராக பொறுப்பேற்ற போது, அமித் ஷாவும் அமைச்சரானதில் யாருக்கும் ஆச்சர்யமில்லை. உள்துறை அமைச்சராக, அமித் ஷா பொறுப்பேற்ற, 10 நாட்களிலேயே, அமைச்சக செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எனினும், மத்திய உள்துறை அமைச்சர் என்ற வகையில், அமித் ஷா முன், பிரமாண்ட சவால்கள் காத்திருக்கின்றன என்பது உண்மை.

காஷ்மீர் பிரச்னை

அமித் ஷா முன், பிரமாண்டமாய் நிற்கும் முதல் பிரச்னை, ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தான். மாநிலத்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் பயங்கரவாத பிரச்னைக்கு, முடிவு கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில், பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்த சம்பவங்கள், 93 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல், பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களும், 176 சதவீதம் அதிகரித்து உள்ளது.

மாநிலத்தில், விரைவில் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில், கடந்த, 16 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மாநிலத்தில், காஷ்மீர் ஆதிக்கம் தான் அதிகம் உள்ளது. இதை மாற்றி, ஜம்முவுக்கும், காஷ்மீருக்கும் சமமான அதிகாரம் இருக்கும் வகையில், தொகுதிகளை மறுசீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில், தொகுதி மறுசீரமைப்பு பற்றி ஆய்வு செய்து, தாக்கல் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகளை, அமித் ஷா ஏற்றுக் கொண்டுள்ளார். ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370வது சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என, பா.ஜ., பல ஆண்டுகளாக கூறி வருகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது, '370வது சட்டப் பிரிவை நீக்குவோம்' என, அமித் ஷா உறுதியளித்தார்.

எனினும், ராஜ்யசபாவில் பெரும்பான்மை கிடைத்த பின் தான், இதற்கான நடவடிக்கையில், அமித் ஷாவால் ஈடுபட முடியும். மாநிலத்தில், அமர்நாத் யாத்திரை, ஜூலை, 1ல் துவங்கி, ஆகஸ்ட், 15ல் முடிகிறது. இந்த யாத்திரையை, எந்த வித அசம்பாவிதமும் இன்றி நடத்துவது தான், அமித் ஷாவுக்கு உள்ள உடனடி சவால்.

ஊடுருவல்

மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில், வங்கதேசத்தினர் சட்ட விரோதமாக ஊடுருவது தொடர்கிறது. இவர்களை, வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை, அரசு மேற்கொள்ள வேண்டும். தேசிய குடியுரிமை மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதை நிறைவேற்றி, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பு, அமித் ஷாவிடம் தான் உள்ளது.

நக்சல்

கடந்த, ஐந்து ஆண்டு கால ஆட்சியில், நக்சல் பாதிப்பு மாவட்டங்கள், 126லிருந்து, 90 ஆக குறைந்து விட்டன. எனினும், நக்சல் வன்முறை ஒழிக்கப்படவில்லை. லோக்சபா தேர்தல் நேரத்தில், நக்சல்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், வன்முறைகள் வெடித்தன. நக்சல்களை ஒடுக்கி, அங்கு வளர்ச்சியை ஏற்படுத்துவது தான், அமித் ஷாவுக்கு உள்ள முக்கியமான பணி.
அயோத்திஅயோத்தியில், பிரச்னைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என, ஹிந்து அமைப்புகள், அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. அடுத்த ஐந்து ஆண்டில், இப்பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், எப்போதும் காண முடியாது என, ஹிந்து அமைப்பினர் கூறுகின்றனர். அதனால்,

Advertisement

அயோத்தி பிரச்னைக்கு சுமுக தீர்வு கண்டு, ஹிந்து அமைப்பு களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்வது, அமித் ஷாவின் கைகளில் தான் உள்ளது. இவை தவிர, போலீஸ் துறை சீர்திருத்தம், மத்திய - மாநில உறவுகள் ஆகியவையும், அமித் ஷாவுக்கு சவால் தருகின்றன.
'ஒரு தேசம்; ஒரே தேர்தல்' என, பா.ஜ., கூறி வருகிறது. அதற்கு, அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். ஆனால், இவ்விஷயத்தில் அரசியல் கட்சிகளிடம், ஒருமித்தக் கருத்து ஏற்படவில்லை. இப்போது, இதை நிறைவேற்றும் பொறுப்பும், அமித் ஷாவிடம் தான் உள்ளது.

ரிமோட் கன்ட்ரோல்'

பா.ஜ., தலைவராக அமித் ஷாவின் பதவி காலம், கடந்த ஜனவரியில் முடிந்துவிட்டது. எனினும், லோக்சபா தேர்தலுக்காக, ஜூன் மாதம் வரை, அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. இப்போது, டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வின் புதிய தலைவராக, முன்னாள் மத்திய அமைச்சர், ஜே.பி.நட்டா, மத்திய பிரதேச முன்னாள், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என, தெரிகிறது. யார் தலைவராக வந்தாலும், கட்சியை இயக்கும், 'ரிமோட் கன்ட்ரோலாக' அமித் ஷாவும், மோடியும் இருப்பர் என்றால், அது மிகையில்லை.


நடவடிக்கை எடுப்பார்

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் செயல்பாடுகள் பற்றி, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: உறுதியான, கடும் நடவடிக்கைகள் எடுப்பது தான், அமித் ஷாவுக்கு உள்ள பெருமை. பா.ஜ., தலைவராக அவர் எடுத்த நடவடிக்கைகள் தான், தே.ஜ., கூட்டணியை உடையாமல் காப்பாற்றியது. சமீபத்திய லோக்சபா தேர்தலில், பா.ஜ., பெற்ற வெற்றிக்கு பின், அமித் ஷாவின் உழைப்பு உள்ளது. உள்துறை அமைச்சக பணி, பெரும் சவால்கள் நிறைந்தது. உறுதியான, கடும் நடவடிக்கைகளால், காஷ்மீரில், பயங்கரவாத பிரச்னைக்கு, அமித் ஷா நிச்சயம் தீர்வு காண்பார். இந்தியாவில், பயங்கரவாத தாக்குதல்களை துாண்ட, பாகிஸ்தான் நிச்சயம் யோசிக்கும். ஏனெனில், அப்படி துாண்டினால், அதற்கு சரியான பதிலடியை இந்தியா கொடுக்கும் என்பது உறுதி. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
16-ஜூன்-201910:57:41 IST Report Abuse

blocked userதீராத காஷ்மீர் தீவிரவாத பிரச்சினையை தீர்த்து வைத்தால் அடுத்த பிரதமர் வேட்பாளராக வர வாய்ப்பு அதிகம்.

Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
16-ஜூன்-201909:32:03 IST Report Abuse

 Muruga Velஜம்மு மற்றும் லே லதாக்கை தனி மாநிலங்களாகவோ அல்லது யூனியன் பிரதேசமாகவோ அறிவித்து காஷ்மீரை மட்டும் தனியாக மாநிலமாக அறிவித்தால் கொட்டம் அடங்கும் .. மின்சாரத்துக்கு பணம் கட்டுவதில்லை .. வருமான வரி போன்ற எந்த வரியையும் கட்டாமல் ராணுவ கேண்டின் சலுகை முதல் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கிறார்கள் ..

Rate this:
RajanRajan - kerala,இந்தியா
16-ஜூன்-201908:36:26 IST Report Abuse

RajanRajanON TOP PRIORITY IN A RIGHT TIME WE HAVE TO WASH-OUT THE ENTIRE TERROR CAMP AT POK. IT IS QUITE POSSIBLE FOR MODI SARKAR. JAI HIND.

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X