பதிவு செய்த நாள் :
அழைப்பு!
நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்படி மாநில அரசுகளுக்கு...
'நிடி ஆயோக்' கூட்டத்தில், பிரதமர் மோடி பேச்சு

புதுடில்லி : ''நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், ஒவ்வொரு மாநிலமும், தனக்குள்ள உண்மையான திறனை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்ட அளவிலும், இதற்கான முயற்சிகள் துவங்க வேண்டும்,'' என, டில்லியில் நேற்று நடந்த, 'நிடி ஆயோக்' கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

மாநில அரசுகளுக்கு  பிரதமர் மோடி அழைப்பு!


மத்திய அரசுக்கு, திட்டங்கள் தொடர்பான ஆலோசனை வழங்கும், நிடி ஆயோக் அமைப்பின், ஐந்தாவது நிர்வாகக் குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. கூட்டத்தை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான, லோக்சபா தேர்தலை சமீபத்தில் நாம் சந்தித்தோம். தற்போது, நாட்டின் வளர்ச்சிக்காக, ஒவ்வொருவரின் வளர்ச்சிக்காக, நாம் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது.

வறுமை, வேலைவாய்ப்பின்மை, வறட்சி, வெள்ளம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, வன்முறை ஒழிப்பு என, அனைத்தையும் நாம் அனைவரும் இணைந்து எதிர் கொள்ள வேண்டும். தற்போது நாட்டின், மொத்த பொருளாதாரம், 130 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. வரும், 2024க்குள், 349 லட்சம் கோடி ரூபாயாக இதை உயர்த்த வேண்டும்.

பண உதவி திட்டம்

இது சற்று சவாலான விஷயம்தான்; ஆனால், முயன்றால், எட்டக் கூடிய ஒன்று. ஜி.டி.பி., எனப்படும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை உயர்த்த வேண்டும். இதற்கு, அனைத்து மாநிலங்களும் உதவ வேண்டும். தங்களுடைய மாநிலத்தின் அடிப்படை திறன் என்ன என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். மாவட்ட அளவில், ஜி.டி.பி., வளர்ச்சிக்கான பணிகள் நடக்க வேண்டும். தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், வறட்சி நிலவுகிறது. இதை எதிர்கொள்ள, ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வரும், 2022க்குள் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என, அனைவரும் விரும்புகிறோம். இதற்கான இலக்குகளை வகுத்து, அதன்படி செயல்பட வேண்டும். துாய்மை இந்தியா இயக்கம், இலவச மருத்துவக் காப்பீடு போன்ற திட்டங்கள், மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு இணைந்து செயல்படலாம் என்பதற்கான உதாரணங்கள்.

விவசாயிகளின் வருவாயை, 2022க்குள், இரட்டிப்பாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதை எட்ட வேண்டுமானால், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, தோட்டக்கலை உள்ளிட்டவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கான பண உதவி திட்டத்தை, நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும்.

நடவடிக்கை


விவசாய துறையில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட வேண்டும். தனியார் முதலீடு, உணவுப் பொருட்கள் சேமிப்பு என, அனைத்திலும் மாற்றம் கொண்டு வர வேண்டும். உணவு பதப்படுத்துதல் துறையும், உணவு உற்பத்தியை விட அதிக வேகமாக செயல்பட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும், நக்சல் பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான, இறுதியான நடவடிக்கையை துவக்க உள்ளோம். பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்படும்.

மக்களின் உடல்நலனில் அதிக அக்கறை காட்டப்படும். வரும், 2025க்குள், காசநோய் முழுமையாக அகற்றப்பட வேண்டும். ஆயுஷ்மான் பாரத் என்ற, இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தை, இதுவரை செயல்படுத்தாத மாநிலங்களிலும் செயல்படுத்த வேண்டும். அனைவருடன் இணைந்து, அனைவரின் நலனுக்காக மற்றும் அனைவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப என்ற கோஷத்தின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

மன்மோகனுடன் சந்திப்பு

நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, டில்லி வந்த, காங்., ஆளும் மாநில முதல்வர்கள், மன்மோகன் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினர். காங்.,கைச் சேர்ந்த, மத்திய பிரதேச முதல்வர், கமல்நாத்; ராஜஸ்தான் முதல்வர், அசோக் கெலாட்; புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி; சத்தீஸ்கர் முதல்வர், புபேஷ் பாஹல் ஆகியோர், இதில் பங்கேற்றனர். இவர்களைத் தவிர, கர்நாடகாவில், காங்.,குடன் இணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ள, மதச் சார்பற்ற ஜனதா தளத் தலைவர், குமாரசாமியும், இந்த சந்திப்பில் பங்கேற்றார். நிடி ஆயோக் கூட்டத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து, மன்மோகன் சிங்கிடம் அவர்கள் ஆலோசனை கேட்டனர்.


மம்தா, ராவ் புறக்கணிப்பு

பிரதமர் தலைமையில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தில், பெரும்பாலான மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். அதே நேரத்தில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி புறக்கணித்தார். 'நிதி அதிகாரம் இல்லாத இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது வீண்' என, அவர் கூறியிருந்தார். தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான, சந்திரசேகர ராவ், நேற்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 'மாநிலத்தின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 80 ஆயிரம் கோடி ரூபாயில், காலேஸ்வரம் பாசன நீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணியில் இருப்பதால், இந்தக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலம் சரியில்லாததால், காங்.,கைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர், அமரீந்தர் சிங்கும், கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, மாநில நிதி அமைச்சர் மன்பிரீத் பாதல் பங்கேற்றார்.

Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naren - Chennai,இந்தியா
16-ஜூன்-201920:00:57 IST Report Abuse

Narenநீங்கள் பேசும் மக்களின் பிரச்னைகளை செயல் படுத்த துணிந்தால் நீங்கள் நினைப்பது போல் 50 ஆண்டுகாலம் உங்கள் ஆட்சி தொடரும்... மக்கள் ஆதங்கமும் இதுதான்... மக்களுக்காக ஒரு அரசு இருக்காதா என ஏங்கும் மக்களின் குரல் உங்களுக்கு கேட்கும் என்றால் உங்கள் ஆட்சி நல் ஆட்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை... சிறு குறு தொழில் செய்பவர்களுக்கும் நலத்திட்டங்கள் கொண்டு வாருங்கள்... புதிதாக தொழில் தொடங்குவோரை ஊக்குவிக்கவும் வழி செய்யுங்கள்...

Rate this:
venkatan - Puducherry,இந்தியா
16-ஜூன்-201917:40:16 IST Report Abuse

venkatanகுடிநீர்,விவசாயம்,,மீனளம், கால்நடை,சுகாதாரம்,கிராம கைவினை பொருட்கள்,உணவுபங்கீடு,கிராமப்புற தொழில் முனைவோர்,வறட்சி பணிகள்,நீர் மேலாண்மை விவசாய பொருள் சந்தை படுத்துதல் போன்ற கிராம சார்பு திட்டங்களை,கீழிருந்து மேலாக பஞ்சாயத் ராஜ் மூலம் மாவட்ட ஆட்சியரால் திட்டங்கள் தொகுக்கப்பட்டு நேராக கிராம மற்றும் சமுதாய வழற்சித்துறைக்கு அனுப்பி ஒப்புதலுடன் உடன் செலவு செய்யப்படவேண்டும்.அதற்க்கு ஊராட்சியை வலுப்படுத்துக.

Rate this:
venkatan - Puducherry,இந்தியா
16-ஜூன்-201917:28:17 IST Report Abuse

venkatanவிளை நிலங்கள் மனைகளாகவும், மால்களாகவும் மாற்றப்படுவது தடை செய்தல் விவசாயத்தின் அடிப்படை முன்னுரிமை.

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X