அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தாமரை மலர ரஜினியுடன் கூட்டணி
பா.ஜ., கூட்டங்களில் வலியுறுத்தல்

தமிழகத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய, 13 கோட்டங்களில், சுய பரிசோதனை கூட்டங்கள் நடத்த, தமிழக, பா.ஜ., ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டங்களில், 'ரஜினியுடன் கூட்டணி வைக்க வேண்டும்' என, பெரும்பான்மையான நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

 தாமரை மலர பா.ஜ ரஜினியுடன் கூட்டணி


லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த கூட்டணி போட்டியிட்ட தொகுதிகளில், தேனி யில் மட்டும், அ.தி.மு.க., வெற்றி பெற்றது.

நடவடிக்கை


மற்ற, 37 தொகுதிகளில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து, கட்சி நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்டு, அறிக்கை அனுப்பும்படி, பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய உள்துறை

அமைச்சருமான அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.


அதன் அடிப்படையில், 7ம் தேதி, சென்னையிலும் 8ம் தேதி, காஞ்சிபுரத்திலும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் பங்கேற்ற, பா.ஜ., நிர்வாகிகள் பேசியதாவது : அ.தி.மு.க., வினர் சரிவரஒத்துழைப்பு அளிக்கவில்லை. தமிழக அரசு மீதுள்ள கோபத்தின் வெளிப்பாடு தான், தி.மு.க., வெற்றிக்கு காரணம். கடந்த லோக்சபா தேர்தலில், மூன்றாவது அணி அமைத்து, நாம் வாங்கிய ஓட்டுகளை தான், இப்போதும் பெற்றுள்ளோம்.ஊழல் ஒழிப்பு என்பது, பா.ஜ.,வின் பிரதான கொள்கை; நாடு முழுவதும், அதை செயல் படுத்தினோம்.


தமிழகத்தில், ஊழல் கட்சியாகக் கருதப்படுகிற, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்ததை, மக்கள் ஏற்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்லாமல், ஆட்சியாளர்கள் மீதும், ஊழல் புகாரில் நடவடிக்கை எடுத்திருந்தால், பொது மக்கள், பா.ஜ.,வை வரவேற்றிருப்பர். ஆட்சியாளர்களின் ஊழல்கள் மீது, நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், ஒருதலைபட்சமாக செயல்பட்டு விட்டோம் என்ற கருத்து, மக்களிடம் உருவாகி உள்ளது.


எனவே, தவறு யார் செய்திருந்தாலும், அவர்கள் மீது பாரபட்ச மின்றி நடவடிக்கை எடுக்க, பா.ஜ., தயங் காது என்பதை, மக்களிடம், இனி வரும் காலங் களில் உணர்த்த வேண்டும்.பரிசோதனைதிராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல், ஆன்மிக அரசியல் நடத்த

Advertisement

விரும்பும், ரஜினியுடன் கூட்டணி அமைத்தால், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். இவ்வாறு, அவர்கள் பேசியதாக தெரிகிறது.


தொடர்ந்து, மதுரை, கன்னியாகுமரி, சிதம்பரம், சேலம், ஈரோடு, கோவை, தர்மபுரி, வேலுார், திருச்சி, தஞ்சாவூர், ராமேஸ்வரம் என, இம்மாதம் இறுதி வரை, சுயபரிசோதனை கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்த கூட்டங்க ளை முடித்த பின், அறிக்கை தயார் செய்து, டில்லி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின், தமிழக அரசியலில், பா.ஜ., ஆட்டம் ஆரம்பமாகும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தவறு யார் செய்திருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க, பா.ஜ., தயங்காது என்பதை, மக்களிடம், இனி வரும் காலங்களில் உணர்த்த வேண்டும். திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல், ஆன்மிக அரசியல் நடத்த விரும்பும், ரஜினி யுடன் கூட்டணி அமைத்தால், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.

- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopal Thiyagarajan - Chennai,இந்தியா
21-ஜூன்-201910:02:50 IST Report Abuse

Gopal Thiyagarajanயாரோடு கூட்டணி வைத்தாலும், தமிழ் நாட்டில் தாமரை மலரவே மலராது.

Rate this:
arun veli - chennai,இந்தியா
20-ஜூன்-201915:15:56 IST Report Abuse

arun veliரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வரணும். வந்தாதான் அவருக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்று எல்லா அரசியல்வாதிக்கும் தெரியும்...அதற்க்கு அப்புறமாவது இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் நிற்கும்

Rate this:
oce - chennai,இந்தியா
16-ஜூன்-201918:50:58 IST Report Abuse

oceபாஜகவும் ரஜினியும் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. திமுகவால்தான் முடியும். இதை ஜெயலலிதா ஆட்சியில் சொல்லி இருக்க முடியுமா. இந்த சவடாலை எம்ஜியார் காலத்தில் சொல்லி இருக்க முடியுமா.

Rate this:
மேலும் 56 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X