பதிவு செய்த நாள் :
நீர் சேகரிப்பு
பிரதமர் மோடி கடிதம்

புதுடில்லி : நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து தலைவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ள கடிதம், மாவட்ட கலெக்டர்கள் மூலம், நேரடியாக ஒப்படைக்கப்படுகிறது.

நீர் சேகரிப்பு பிரதமர் மோடி கடிதம்


நீர் சேமிப்பை வலியுறுத்தும் இந்தக் கடிதம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பருவ மழை பொய்த்ததால், கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் வெயிலின் உக்கிரமும் .

அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், தென் மேற்கு பருவ மழைக் காலம் துவங்கியதுசமீபத்தில், இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, நாட்டில் உள்ள, அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து, ஒரு கடிதம் எழுதியுள்ளார்.


இந்தக் கடிதம், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் நிர்வாகம் மூலம், பஞ்.,தலைவர்களிடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்டு வருகிறது. கடிதத்தில், பிரதமர்மோடி கூறியுள்ளதாவது : வணக்கம். நீங்களும், உங்கள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, நம் சகோதர - சகோதரிகளும், நல்ல உடல்நலத்துடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளது. மழை எனும் மிகப் பெரியஆசியை, நமக்கு கடவுள்

Advertisement

வழங்குகிறார். அந்தஆசியை, அதிக அளவில் சேமித்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு துளி மழைநீரையும் சேமிக்க முயற்சி செய்யவும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது. இந்தக் கடிதம், மாவட்ட கலெக்டர்கள் மூலம், கிராம பஞ்., தலைவர்களுக்கு அனுப்பும் நடவடிக்கை, பல மாநிலங்களில் துவங்கியுள்ளது. இந்தக் கடிதம், பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ranga - paapaanpuram,இந்தியா
16-ஜூன்-201915:49:29 IST Report Abuse

Rangaஇதை ஜெயலலிதா எப்போவோ செய்ய சொல்லி வலியுறித்திட்டாங்க.

Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
16-ஜூன்-201910:01:11 IST Report Abuse

pattikkaattaan நம் நாட்டில் உள்ள இயற்கை வளங்களை வளப்படுத்துங்கள் .. மரங்களை வெட்டியதால் காடுகள் அழிந்துவிட்டன ... ஆறுகளில் மணல் கொள்ளை .. மலைகளை வெட்டி , பாறைகள் கடத்திவிட்டார்கள் .. குளங்கள் எல்லாம் வீட்டு மனைகள் .. இதனால் மழை பெய்யாது , தண்ணீரும் கிடைக்காது .. இப்படியே போனால் இன்னும் கொஞ்ச காலத்தில் தண்ணீர் இல்லாமல் மக்களும் , மற்ற உயிரினங்களும் மடிந்துவிடும்.. கொஞ்சம் இதையெல்லாம் பாருங்க அய்யா .. இந்த ஐந்து வருடத்திற்கு இந்தியாவை சுற்றி வாருங்கள் .. நம் தலைமுறை நிலைக்கவேண்டும் .. நீங்கள் சரி செய்வதற்கு இங்கு நிறைய வேலை இருக்கிறது .. இதை மட்டும் செய்தாலே , அடுத்த முறையும் நீரே பிரதமர் ..

Rate this:
Arachi - Chennai,இந்தியா
16-ஜூன்-201907:08:37 IST Report Abuse

Arachiபஞ்சாயத் ராஜ் என்ற திடடத்தை மறைந்த Rajiv காந்தி அவரது ஆட்சி காலத்தில் கொண்டு வந்துள்ளார். அதில் கிராமப்புற குடிநீர் மேம்பாடு குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜெயா காலத்தில் கொண்டுவந்த மழை நீர் சேகரிப்பு திட்டம் தான் இன்றுவரைக்கும் சிறந்த திடடமாகக் கருதப்படுகிறது தமிழ் நாட்டில்.

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X