பதிவு செய்த நாள் :
'மெட்ரோ மேன்' ஸ்ரீதரனின் எதிர்ப்பால்
எங்களுக்கு அதிர்ச்சி, மனவலி: சிசோடியா

புதுடில்லி : ''மெட்ரோ ரயில்களில், பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற, எங்கள் அரசின் திட்டத்துக்கு, 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, அதிர்ச்சியையும், மன வலியையும் தந்துள்ளது,'' என, டில்லி துணை முதல்வர், சிசோடியா கூறியுள்ளார். டில்லியில், மக்களின் பிரதான போக்குவரத்து சேவையாக மெட்ரோ ரயில் உள்ளது. தினமும், பல லட்சம் பயணியர், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்கின்றனர்.

 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரனின் எதிர்ப்பால் எங்களுக்கு அதிர்ச்சி, மனவலி: சிசோடியா


டில்லியில், மெட்ரோ ரயில் சேவையை உருவாக்கியதில், அதன் நிர்வாக இயக்குனராக இருந்த ஸ்ரீதரனுக்கு, பெரும் பங்கு உண்டு. மேலும், பல நகரங்களில், மெட்ரோ ரயில் சேவை துவங்கியதிலும், ஸ்ரீதரன் முக்கியபங்காற்றியுள்ளார்.டில்லி மெட்ரோ ரயில்

மாநிலமான கேரளாவில் வசித்து வருகிறார். மெட்ரோ ரயில் சேவை பணியால், 'மெட்ரோ மேன்' என,மக்களால் அழைக்கப்படுகிறார். இந்நிலையில், 'டில்லியில் இயக்கப்படும், அரசு பஸ்கள், மெட்ரோ ரயில்களில், கட்டணம் செலுத்தாமல் பெண்கள் பயணம் செய்யும் திட்டம்,விரைவில் அறிமுகப் படுத்தப்படும்' என, டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த, 2-ம் தேதி அறிவித்தார். 'விரைவில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில், கெஜ்ரிவால் அறவித்து உள்ள சலுகை இது' என, பல தரப்பினரும் கூறினர்.

இதையடுத்து,பிரதமர் மோடிக்கு, ஸ்ரீதரன் அனுப்பிய கடிதத்தில், 'டில்லி முதல்வர் அறிவித்துள்ள இலவச மெட்ரோ பயண திட்டம், சரியானது அல்ல. இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தால், மெட்ரோ ரயில் திவாலாகி விடும்; இதற்கு, பிரதமர் ஒப்புதல் அளிக்கக் கூடாது' என, கூறியிருந்தார்.

இந்நிலையில், இக்கடிதம் குறித்து, டில்லி துணை முதல்வர், மணீஷ்சிசோடியா கூறியதாவது: பிரதமருக்கு ஸ்ரீதரன் எழுதியுள்ள கடிதம் அதிர்ச்சியையும், மன வலியை யும் தந்துள்ளது. பெண்களின் பாதுகாப்புக்காகவும், காற்று மாசை குறைக்கவும், பொது போக்குவரத்தை யன்படுத்துவதை ஊக்குவிக்கவும், பஸ் மற்றும் மெட்ரோ ரயில்களில், பெண்களுக்கு இலவச

Advertisement

பயணம் திட்டத்தை, கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். இது, ஒரு புரட்சிகரமான திட்டம். டில்லி மெட்ரோ ரயில் போக்குவரத்து கழகத்திடமிருந்து, தினமும் பல லட்சம் டிக்கெட்களை, அரசு வாங்கி, பெண்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்?


மெட்ரோ ரயில் சேவையின், மூன்றாம் கட்ட பணிகள் முடிந்த பின், தினமும், 40 லட்சம் பேர் பயணிப்பர். மெட்ரோ ரயில் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. அதை குறைத்தால், தினமும், 50 - 60 லட்சம் பேர் பயணிப்பர். இது பற்றி, ஸ்ரீதரனுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு சிசோடியா கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜூன்-201916:50:22 IST Report Abuse

Sriram VLet kujliwal give the money from his party fund

Rate this:
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
16-ஜூன்-201909:37:46 IST Report Abuse

 Muruga Velடில்லியில் குப்பை மலைகள் தாஜ்மஹாலை விட உயரம் அதிகம் ...அவை எரிக்கப்படும்போது வரும் நச்சு புகையால் டில்லி மக்கள் நுரையீரல் நோய்க்கு ஆளாகிறார்கள் … தண்ணீர் பிரச்னை மின்சார பிரச்சனைகளை தீர்ப்பதில் கேஜரிவால் அரசாங்கம் ஒன்றும் சாதிக்கவில்லை ...

Rate this:
Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜூன்-201908:40:47 IST Report Abuse

Thiaguஉஙக பணத்துல குடுங்க, சம்பளம் வாங்காதீங்க, எல்லா வசதியும் வேணாம்னு சொல்லுங்க.இஙக பாருங்க சூசை விவசாயிகள் கடன சொத்தை வித்து அடைகின்றார்

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X