சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கட்டுப்பாடு வருமா?
தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு
தீர்வு காண தொழிற்சாலைகளுக்கு

தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண, தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து, அவற்றில் தினமும் பயன்படுத்தப்படும், பல லட்சம் லிட்டர் நீரை, மக்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாட்டு, தீர்வு,  கட்டுப்பாடு,


தமிழகத்தில், போதிய அளவு மழை பெய்யாததால், பல அணைகள் வறண்டு விட்டன. இதனால், தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக, சென்னையில், குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல், மக்கள், காலி குடங்களுடன், போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதே நிலைமை, பல மாவட்டங்களிலும் நிலவுகிறது. இதனால், தொழிற்சாலைகளில், தண்ணீர் பயன்படுத்த கட்டுப்பாடு களை விதித்து, அந்த தண்ணீரை, மக்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.அனுமதி தருவதில்லை.

இது குறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், மோட்டார் வாகன தயாரிப்பு, டயர், கண்ணாடி போன்றவை தயாரிக்கும்,

சர்வதேச நிறுவனங்களின் தொழிற்சாலைகள் உள்ளன. தமிழகத்தில், 2008ல், மின் பற்றாக்குறை ஏற்பட்டது.இதனால், மின்சாரம் பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதித்து, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, வீடுகளுக்கு சுழற்சி முறையில், இரண்டு மணி நேரம் மின் தடை செய்யப்பட்டது. தொழிற்சாலைகளுக்கு, வாரத்தில், ஒரு நாள் விடுமுறை விடப்பட்டதுடன்,இரவில், குறைந்த மின்சாரம் பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டது.

இதனால், தொழிற்சாலைகளுக்கு வழங்க இருந்த மின்சாரம், வீடுகளுக்கு வழங்கப்பட்டது. 'டயர், பெயின்ட்' தயாரிக்கும் தொழிற்சாலை களில், தினமும், பல லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த தண்ணீரை, அந்த ஆலைகள், குடிநீர் வாரியத்திடம் இருந்து வாங்குகின்றன. ஆலைகள், நிலத்தடி நீரை பயன்படுத்த விரும்பினால், பொதுப்பணி துறையிடம் அனுமதி பெற வேண்டும். அதற்கு, தற்போது அனுமதி தருவதில்லை.

'குடிநீர் வழங்குவதில், மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும்; அதன்பின், ஆலைகளுக்கு தரப்படுவதாகவும்' ஆட்சியாளர்கள் கூறினாலும், சில தொழிற்சாலைகளுக்கு, தடையின்றி தண்ணீர் வழங்கப்படுகிறது. அதிலும், ஆட்சியாளர்கள், விரும்பாத தொழிற்சாலைகளுக்கு, தண்ணீர் தர தாமதம் செய்வதால், அவை, தனியாரிடம் வாங்கி கொள்கின்றன. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின், கிராம பகுதிகளில், 200 அடியில், சுவையான தண்ணீர்

Advertisement

கிடைக்கிறது. இதனால், மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில், சிலர் ஆழ்குழாய் கிணறு அமைத்து, லாரிகளில் தண்ணீர் நிரப்பி, தொழிற்சாலைகளுக்கு, சப்ளை செய்கின்றனர். அதேசமயம், தண்ணீர் இன்றி, பொது மக்கள், அத்தியாவசிய பணிகளை கூட மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, தண்ணீர் பயன்பாடு அதிகம் உள்ள, தொழிற்சாலைகளுக்கு, அரசு வாரத்தில், ஒரு நாள் விடுமுறை அல்லது, 'ஷிப்ட்' குறைப்பு போன்ற கட்டுப் பாடுகளை, தற்காலிகமாக விதிக்க வேண்டும்.ஓரளவு சமாளிக்கலாம்.

இதனால், அந்த ஆலைகள், தனியாரிடம் கூட, தண்ணீர் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. அந்த ஆலைகளுக்கு சப்ளை செய்வோரும், தாங்கள் எடுக்கும் தண்ணீரை, பொது மக்களிடம் வழங்க வேண்டிய நிலை ஏற்படும். இப்படி செய்தால், தற்போது ஏற்பட்டுள்ள, தண்ணீர் தட்டுப்பாட்டை, ஓரளவு சமாளிக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
16-ஜூன்-201919:16:42 IST Report Abuse

R chandarOnce we were in absolute crisis of electricity now that problem is getting resolved by making contract on procuring electricity from private manufacturer and giving licence to private solar manufacturer like that we should encourage private big company to install more diesalination plants and make an agreement to supply water through pipeline instead of spending on lorry services by allowing private to manufacture water government can get licence fee and see to it they are getting money from government against requirement of water distributed through pipeline from government pumping station to all houses and industry and fix water meter or collect water charges from the users of water through pipeline. This tender should be finalized and make it functional with in two months under BOOT tem (Boot Operate and transfer tem) for a period of 20 years . Or do it immediately by enhancing the capacity two 100 mld plants situated in Chennai on immediate basis under central government scheme. Central government should pay more attention to this problem as tamilnadu is not getting water as stipulated in tribunal order and considering the tamilnadu state contribution in General sales tax tem and income tax tem , try to make this scheme operated under central government scheme till godavari water connected with tamilnadu as promised

Rate this:
svs - yaadum oore,இந்தியா
16-ஜூன்-201915:57:46 IST Report Abuse

svsஇங்கு எழுதுபவர்கள் பல பேர் கர்நாடகாவில் நீர் மேலாண்மை நன்றாக உள்ளது என்று கூறுகிறார்கள் ...அதை பார்த்தாவது இங்குள்ளவர் திருந்தனும்.. இங்குள்ள தண்ணீர் பிரச்னையை எழுதினால் உடன் பல மாநிலங்களில் அப்படித்தான் உள்ளது என்றும் அதற்கு திராவிட ஆட்சி காரணமல்ல என்கிறார்கள் .....அப்போது இவ்வளவு நாள் வட நட்டான் , படிப்பறிவில்லாதவன் என்று எழுதிவிட்டு இப்பொது அங்கும் அப்படித்தானே உள்ளது என்பதற்கு என்ன அர்த்தம் ??..... தமிழன்டா , தமிழச்சிடா , என்பதெல்லாம் இப்பொது காணாமல் போய்விட்டது போலும் .....

Rate this:
Ashanmugam - kuppamma,இந்தியா
16-ஜூன்-201913:20:06 IST Report Abuse

Ashanmugamஇரண்டே தீர்ப்பு உள்ளது. ஒன்று கடல் நீரை குடிநீராக மாற்றுவது. இரண்டு இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளை இணைக்க வேண்டும்.

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X