நல்லுறவு முக்கியம்

Added : ஜூன் 16, 2019
Advertisement
 நல்லுறவு முக்கியம்

நல்லுறவு முக்கியம்
தேர்தல் முடிந்துவிட்டது. மோடி, பிரதமர்; நான், முதல்வர். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். மாநில நிதி நிலைமை சீரடைய, பிரதமரின் உதவி தேவை. அதனால், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே, நல்லுறவு முக்கியம். மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க, பிரதமரிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன்.
-ஜெகன் மோகன் ரெட்டிஆந்திர முதல்வர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்
கோவில் நிச்சயம்
அயோத்தியில், பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்படுவது உறுதி. ஆனால், ராமர் பெயரை கூறி, சிவசேனா, ஓட்டு கேட்டதில்லை ஒரு போதும் கேட்காது. ராஜ்யசபாவில், தே.ஜ., கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தவுடன், கோவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சஞ்சய் ராவுத்மூத்த தலைவர், சிவசேனா.
காட்டாட்சி
உத்தர பிரதேசத்தில், இப்போது, காட்டாட்சி நடக்கிறது. மாநிலத்தில், எங்கள் ஆட்சி நடந்த போது, கவர்னர், ராம்நாயக், சட்டம் - ஒழுங்கு பிரச்னை பற்றி, என்னிடம் அடிக்கடி பேசுவார். ஆனால், இப்போது, முதல்வர் ஆதித்யநாத்திடம், கவர்னர் எதுவும் கேட்பதில்லை. மாநிலத்தில், சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.
-அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதி கட்சி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X