டில்லி உஷ் :பதறிய அமைச்சர்கள்

Added : ஜூன் 16, 2019
Advertisement

பதறிய அமைச்சர்கள்
சமீபத்தில், டில்லிக்கு வந்த தமிழக அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி இருவரும், பா.ஜ., தலைவர் அமித் ஷாவை சந்தித்தனர். தமிழக அரசியல் நிலை மற்றும் கூட்டணி தோல்வி குறித்து, அவர்கள் பேசியுள்ளனர். அப் போது, அமித் ஷா ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மாறி, மாறி பேசியிருக்கிறார். தங்கமணிக்கு ஓரளவு ஹிந்தி தெரியும் என்றாலும், அமித் ஷாவின் குஜராத்தி கலந்த ஹிந்தி, அவருக்கு சுத்தமாக புரியவில்லை. இரண்டு அமைச்சர்களும், தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு, அமித் ஷா பேசியதை ஓரளவு புரிந்து கொண்டனர். தமிழகத்தில், பா.ஜ., கூட்டணி தோல்வியடைந்தது குறித்து, அமைச்சர்களிடம் கோபப்பட்டிருக்கிறார் அமித் ஷா. தேர்தலில், அ.தி.மு.க., சரியாக வேலை செய்யவில்லை எனவும் அவர்களிடம் குற்றம் சாட்டியிருக்கிறார்.இதைக்கேட்டு தங்கமணி, வேலுமணி இரு வரும் பதறி போயினர். இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், தமிழக அரசியல் களத்தில், அதிரடி நடவடிக்கைகள் எடுக்க, பிரதமர் மோடியும், கட்சி தலைவர் அமித் ஷாவும் முடிவெடுத்துள்ளனர். மேற்கு வங்கத்தில் மம்தா அரசுக்கு குடைச்சல் ஏற்படுத்துவதைப் போலவே, தமிழக கட்சிகளை ஒரு வழியாக்க, பா.ஜ., தயாராகி வருகிறதாம்.
கண்டுகொள்ளாத தமிழகம்
மத்திய அரசின், செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகம், ஆண்டுதோறும், சிறந்த குறும்படங்களுக்கு விருது வழங்குகிறது. இந்த குறும்படங்களை, சம்பந்தப்பட்ட மாநில துார்தர்ஷன் சேனல்களே தயாரித்து, விருதுக்கு அனுப்பும்.பிரதமர் மோடி அரசின் திட்டங்கள், மக்களை எப்படி சென்றடைகிறது என்பதை, இந்த குறும்படங்கள் விவரிக்கும். அதோடு சுற்றுச்சூழல் உட்பட, மக்களை பாதிக்கும் மற்றும் பயன்படக் கூடிய விஷயங்களும் குறும்படங்களாக தயாரிக்கப்படுகின்றன.இந்த முறை, இந்தியாவின் அனைத்து துார்தர்ஷன் கேந்திரங்களிலிருந்தும், 70க்கும் மேற்பட்ட குறும்படங்கள், விருதுக்காக வந்துள்ளன. ஆனால், தமிழக துார்தர்ஷனிலிருந்து, ஒரு குறும்படம் கூட வரவில்லை.'திரைப்பட தயாரிப்பில், தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், அங்கிருந்து ஒரு குறும்படம் கூட வரவில்லையே' என வருத்தப்பட்டிருக்கிறார், செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X