அரசியல் செய்தி

தமிழ்நாடு

கையை பிசையும் கட்சியினர்: மீண்டும் மீண்டும் தேர்தல்

Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (1)
Advertisement

- நமது நிருபர் -

அடுத்தடுத்து இடைத்தேர்தல் வருவது, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., பிரமுகர்களிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், 2016 சட்டசபை தேர்தலுக்கு பின், அடுத்தடுத்து தேர்தல்கள் வந்தபடி உள்ளன. சட்டசபை பொதுத் தேர்தல் முடிந்த பின், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.ஜெயலலிதா மறைவுக்கு பின், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடந்தது. அதன்பின், 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் மற்றும் திருவாரூர், எம்.எல்.ஏ.,வும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், ஏ.கே.போஸ், கனகராஜ் ஆகியோர் மறைவு காரணமாக, 22 சட்டசபை தொகுதிகள் காலியாகின.இவற்றுக்கு, லோக்சபா பொதுத் தேர்தலுடன், இடைத்தேர்தல் நடந்தது. இடைத்தேர்தலுக்கு செலவு செய்யும் பொறுப்பு, அ.தி.மு.க.,வில், அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தி.மு.க.,வில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
லோக்சபா தேர்தல், 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு, பெரும் தொகையை செலவு செய்துள்ள நிலையில், அடுத்து நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் வர உள்ளது.நாங்குநேரி தொகுதி, காங்கிரஸ் வசம் இருந்தது. விக்கிரவாண்டி தொகுதி, தி.மு.க., வசம் இருந்தது. இடைத்தேர்தலில், இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வதுடன், ஆட்சி மீது, மக்களுக்கு அதிருப்தி இல்லை என்பதை காட்ட வேண்டும் என, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.தி.மு.க., இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று, ஆட்சி மீதான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று துடிக்கிறது.
லோக்சபா தேர்தல் மற்றும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அ.ம.மு.க., படுதோல்வியை சந்தித்தது. அதனால், அ.ம.மு.க., நிர்வாகிகள், அணி அணியாக, அ.தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர். அதை முடிவுக்கு கொண்டு வர, இரு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என, தினகரன் முடிவு செய்துள்ளார்.இதனால், தேர்தல் அறிவிக்கப்பட்டால், இரண்டு தொகுதிகளிலும், தேர்தல் களைகட்டும்; பணம் விளையாடும். இரு தொகுதிகளிலும், தலைமை உத்தரவை ஏற்று, பெரும் தொகை செலவிட வேண்டிய சூழல் வருமே என, அ.தி.மு.க., அமைச்சர்களும், தி.மு.க., பிரமுகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஜூன்-201911:13:42 IST Report Abuse
Bhaskaran வான்மழை பெய்கிறதோ இல்லையோ இந்த ரெண்டு தொகுதி வாக்காளர்கள் காட்டிலும் பண மழை என்பதுமட்டும் உறுதி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X