அரசியல் செய்தி

தமிழ்நாடு

அடுத்த அஸ்திரம் நடைபயணம்

Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (3)
Advertisement

முன்னாள் அமைச்சர்கள் சிலர், தங்கள் வாரிசுகளுக்கு, கட்சியில் பதவி கேட்க திட்டமிட்டிருந்ததை தவிர்க்கவும், லோக்சபா தேர்தலில், தி.மு.க., வெற்றியை, திசை திருப்புவதை தடுப்பதற்கும், குடும்ப அரசியல் விமர்சனத்திற்கு இடம் கொடுக்காமல் இருப்பதற்காகவும், தன் மகன் உதயநிதிக்கு, மாநில இளைஞர் அணி செயலர் பதவியை வழங்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் விரும்பவில்லை.அதனால், உதயநிதி தன் அடுத்த அஸ்திரமாக, 'ஸ்டாலினை முதல்வராக்குவோம்' என்ற கோஷத்தை முன்னிலைப்படுத்தி, தமிழகம் முழுவதும் நடைபயணம் செல்ல திட்டமிட்டுள்ளார்.
தலைவர், பொதுச்செயலர், பொருளாளர் பதவியை தொடர்ந்து, இளைஞர் அணி செயலர் பதவிக்கு, தி.மு.க.,வில் செல்வாக்கு அதிகம். நீநீண்ட ஆண்டுகளாக, இளைஞர் அணி செயலர் பதவியை, ஸ்டாலின் வைத்திருந்தார். அவர், கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்ற பின் தான், இளைஞர் அணி செயலர் பதவி, அவரது தீவிர விசுவாசியான, முன்னாள் அமைச்சர், சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், ஸ்டாலினுக்கு தோள் கொடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும், அவரது மகன், உதயநிதி பிரசாரம் செய்தார். லோக்சபா தேர்தலில், தி.மு.க., அமோக வெற்றி பெற்றதால், உதயநிதிக்கு, இளைஞர் அணி செயலர் பதவி வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை, மாவட்ட செயலர்கள் சிலர் நிறைவேற்றி, ஸ்டாலினிடம் வழங்கினர்.
கடந்த, 3ம் தேதி, சென்னை, அறிவாலயத்தில் நடந்த, மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், உதயநிதிக்கு, இளைஞர் அணி செயலர் பதவி வழங்க வேண்டும் என, மாவட்ட செயலர் ஒருவர் பேசினார். ஆனால், ஸ்டாலின் செவி சாய்க்கவில்லை. கருணாநிதி பிறந்த நாள் பரிசாக, தனக்கு பதவி கிடைக்கும் என, எதிர்பார்த்த உதயநிதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.உதயநிதிக்கு மட்டும், இளைஞர் அணி செயலர் பதவி வழங்கியிருந்தால், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் சிலர், தங்கள் வாரிசுகளுக்கும், மாவட்ட செயலர் பதவி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் பதவிகள் கேட்க திட்டமிட்டிருந்தனர்.லோக்சபா தேர்தல் வெற்றி, தி.மு.க.,வின் செல்வாக்கை உயர்த்தியுள்ள நிலையில், உதயநிதிக்கு பதவி வழங்கியிருந்தால், அந்த வெற்றியை திசை மாற்றும் வகையில், குடும்ப அரசியல் விமர்சனத்தை மையப்படுத்தி, பிரசாரம் செய்ய, ஆளுங்கட்சி மேலிடமும் திட்டமிட்டிருந்தது. நீஇந்த இரண்டு தகவலும், ஸ்டாலினுக்கு தெரிய வந்ததும், உதயநிதிக்கு பதவி வழங்குவதை தவிர்த்து விட்டார்.
இந்நிலையில், திருச்சியில் நடந்த விழா ஒன்றில், உதயநிதி பேசுகையில், 'தேர்தல் முடிவுக்கு பின், கட்சியில் எனக்கு பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக, ஊடகங்களில் செய்தி வெளியாகியது. நான், தி.மு.க., உறுப்பினராக இருப்பதே பெருமை. முதல்வராக ஸ்டாலினை அமர வைப்பதே, என் முதல் கடமை; அதற்காக தெருவில் இறங்கி, பிரசாரம் செய்யவும் தயார்' என்றார்.எனவே, கட்சியில், தனக்கென செல்வாக்கை உருவாக்கும் வகையில், 'ஸ்டாலினை முதல்வராக்குவோம்' என்ற கோஷத்துடன், தமிழகம் முழுவதும், நடைபயணம் மேற்கொள்ள உதயநிதி திட்டமிட்டுள்ளார் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஜூன்-201907:57:06 IST Report Abuse
Bhaskaran ராஜ சேகர ரெட்டியார் போல் ஆந்திரா முழுவதும் நடைபயணம் செய்து கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியதை போல் தந்தையை முதல்வராகணும்னு நினைச்சுருக்கார் ,எல்லாம் சரிதான் அதற்கு இறையருள் இருந்தால் மட்டுமே நினைத்ததெல்லாம் நடக்கும்
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
16-ஜூன்-201903:09:02 IST Report Abuse
 Muruga Vel கனி மொழியின் மகன் ஆதித்யாவுக்கு எந்த பதவியும் கிடையாதா
Rate this:
Share this comment
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
16-ஜூன்-201909:03:18 IST Report Abuse
K. V. Ramani Rockfort, 2G புகழ் ராசாவாவிடம் கோரிக்கை வையுங்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X