அரசியல் செய்தி

தமிழ்நாடு

20 சதவீதம் கேட்குது காங்.,: உள்ளாட்சி தேர்தலில் உறவு தொடருமா?

Added : ஜூன் 16, 2019
Advertisement

உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், நான்கு மேயர் பதவி உட்பட, 20 சதவீத இடங்கள் கேட்க, தமிழக காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இது குறித்து விவாதிக்க, அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர்கள் கூட்டம், சென்னை, சத்தியமூர்த்தி பவனில், வரும், 21ம் தேதி நடக்கிறது.தமிழக காங்கிரஸ் கட்சியில், ஒன்பது எம்.பி.,க்களும், ஏழு எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். இதன் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், 20 சதவீத இடங்கள் கேட்க, மாநில தலைவர், கே.எஸ்.அழகிரி திட்டமிட்டுள்ளார்.தமிழகத்தில் மொத்தமுள்ள, 14 மாநகராட்சிகளில், ஓசூர், நாகர்கோவில், திருச்சி, கோவை ஆகிய, நான்கு மாநகராட்சிகளின் மேயர் பதவிகளையும்; சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாநகராட்சிகளின் துணை மேயர் பதவிகளையும், காங்கிரஸ் விரும்புகிறது.
ஆனால், தி.மு.க., தலைமை, காங்கிரஸ் உட்பட, இதர கூட்டணி கட்சிகளுக்கும், இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது இருப்பதால், காங்கிரஸ் விரும்புகிற, 20 சதவீதம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.ஏழெட்டு கட்சிகள்இது குறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது:திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, தி.மு.க.,வுடன் உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பாக, பேச்சு நடத்தப்பட்டது. அப்போது, சென்னை மாநகராட்சியில், முதலில், எட்டு கவுன்சிலர், 'சீட்' தான் தரப்படும் என, தி.மு.க., தரப்பில் கூறப்பட்டது. தி.மு.க., தலைமையிடம், காங்கிரஸ் தரப்பில் தொடர்ந்து பேச்சு நடத்திய பின், 18 கவுன்சிலர்கள் சீட் தர முன்வந்தது.
தமிழகம் முழுவதும், மொத்தமுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளில், 7 சதவீத இடங்களை தான் காங்கிரசுக்கு ஒதுக்க, தி.மு.க., முடிவு செய்தது. அப்போது, தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெறவில்லை.எனவே, காங்கிரஸ் கட்சிக்கு, 7 சதவீதம் வரை தருவதற்கு, தி.மு.க., தயாராக இருந்தது. தற்போது, தி.மு.க., கூட்டணியில், ஏழெட்டு கட்சிகள் உள்ளன. எனவே, அந்த கட்சிகளுக்கும் தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், காங்கிரஸ் கட்சிக்கு, 5 சதவீதம் தான் கிடைக்கும் என, தெரிகிறது.
ஆனால், ஸ்டாலினுடன், கே.எஸ்.அழகிரி இணக்கமாக இருப்பதால், சுமுகமான முறையில் பேச்சு நடத்தி, காங்கிரசுக்கு கூடுதல் ஒதுக்கீட்டை பெற்று தரவும் வாய்ப்பு உள்ளது.வாய்ப்பு இல்லைகடந்த, 2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் தனித்து போட்டியிட்ட போது, சென்னை மாநகராட்சியில், இரண்டு கவுன்சிலர்கள் தான் வெற்றி பெற்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 520 ஊராட்சிகளில், ஒன்றில் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது.எனவே, தி.மு.க., கொடுக்கிற இட ஒதுக்கீட்டை பெற்று, தேர்தலில் போட்டியிட தான் காங்கிரஸ் விரும்புமே தவிர, தனித்து போட்டியிட வாய்ப்பு இல்லை.இது தொடர்பாக ஆலோசிக்க, வரும், 21ம் தேதி, சத்தியமூர்த்தி பவனில், மாநில செயற்குழு, மாவட்ட தலைவர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கவுள்ளது.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X