அரசியல் செய்தி

தமிழ்நாடு

கண்டன அறிக்கையை காணோம்

Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (2)
Advertisement

கருணாநிதி மறைவுக்கு பின், அரசின் செயல்பாடு களை விமர்சித்து, விரிவாக அறிக்கை வெளியிடுவதில், முன்னணியில் இருந்த, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தேர்தல் தோல்வியால், தற்போது அமைதி காக்கிறார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி உயிரோடு இருந்தபோது, தினமும் நாளிதழ்களை, அதிகாலையில் படித்து விடுவார். அவற்றில், மருத்துவம், போக்குவரத்து, உள்ளாட்சி என, அரசு துறைகள் தொடர்பாக வெளிவந்துள்ள புகார்கள் குறித்து, உடனே அறிக்கை வெளியிடுவார்.ஆர்வம்மேலும், மத்திய, மாநில அரசுகளின், புதிய திட்டங்கள், கொள்கைகள், அறிவிப்புகளை விமர்சித்து, அவை வெளியான நாளிலேயே அறிக்கை வெளியிடுவார். அவற்றில், அது தொடர்பான விபரங்கள் விரிவாக இருக்கும். அதற்கு பின் தான், மற்ற அரசியல் கட்சி தலைவர்களே, அந்த பிரச்னை தொடர்பாக அறிக்கைகளை வெளியிடுவர்.கருணாநிதி அறிக்கைகளுக்கு, அதிகாரிகள் தயாரித்து கொடுக்கும் பதில் அறிக்கைகள், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பெயரில் வெளியாகும். முக்கிய பிரச்னைகள் தொடர்பாக, கருணாநிதி வெளியிடும் அறிக்கைகளுக்கு, முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் பதிலளித்து, விரிவாக அறிக்கை வெளியிடுவார்.
கருணாநிதி மறைவுக்கு பின், எந்த பிரச்னையாக இருந்தாலும், விரிவாக அறிக்கை வெளியிடுவதில், ராமதாஸ் ஆர்வம் காட்டினார். அவரது அறிக்கைகள், ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் வெளிவந்தன. தேர்தல் தோல்விக்கு பின், அவரது அறிக்கைகளில் சுரத்தில்லாமல் போய் விட்டது.விமர்சனம்இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:கருணாநிதி மறைவுக்கு பின், தமிழக அரசியல் கட்சி தலைவர்களில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தான், முதல் நபராக, மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை விமர்சித்து, அறிக்கைகள் வெளியிட்டார். அவற்றில், அந்த பிரச்னை தொடர்பாக, விரிவான விபரங்கள் இடம்பெற்றன. அதன் பின், மற்ற கட்சி தலைவர்கள், தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.
தோல்வி
தமிழக அரசில், ஒவ்வொரு துறையிலும் நிலவும் ஊழல் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும், விமர்சனம் செய்து, ராமதாஸ் வெளியிட்ட விரிவான அறிக்கைகளுக்கு, மக்களிடம் வரவேற்பு கிடைத்தது. தி.மு.க.,வினரை விட, ராமதாஸ் தான், அரசை கடுமையாக விமர்சித்தார்.லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்த, பா.ம.க.,வுக்கு, ஏழு லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா பதவியும் வழங்கப்பட்டது. இதை விமர்சித்து, பலரும், சமூக வலைதளங்களில் கருத்துகளை வெளியிட்டனர்.பா.ம.க., ஏழு தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக, தர்மபுரியில், பா.ம.க., சார்பில் போட்டியிட்ட, ராமதாஸ் மகன் அன்புமணியும் தோல்வி அடைந்தார்.தற்போது, தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளால், மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதை பற்றியெல்லாம், ராமதாசிடம் இருந்து, கடுமையான அறிக்கை இல்லை. இதற்கு காரணம், அ.தி.மு.க.,விடம், பா.ம.க., தரப்பில், ராஜ்யசபா, எம்.பி., பதவி கேட்கப்படுகிறது. இதனால் தான், அரசின் செயல்பாடுகள் தொடர்பாக, ராமதாசால் விமர்சிக்க முடிவதில்லை.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஜூன்-201907:54:41 IST Report Abuse
Bhaskaran அதிமுக அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் தரமறுத்தால் மிகக்கேவலமாக அந்த கட்சியை ,தலைவர்களை விமர்சித்து அறிக்கை வெளிவிடுவார்
Rate this:
Share this comment
Cancel
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜூன்-201906:45:00 IST Report Abuse
sekar ng அவர் ஜாதியே அவரை தலை குனிய வைத்தது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X