அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிர்வாகிகள் சந்திப்பு தினகரன் முடிவு

Added : ஜூன் 16, 2019
Advertisement

சென்னை:திருச்சி மாவட்ட, அ.ம.மு.க., நிர்வாகிகள், ஆலோசனைக் கூட்டம், 22ம் தேதி நடக்க உள்ளது.
லோக்சபா தேர்தல் மற்றும், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.ம.மு.க., படுதோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, கட்சி நிர்வாகிகளை சந்திக்க, தினகரன் திட்டமிட்டுள்ளார்.திருச்சி வடக்கு, தெற்கு மற்றும் மாநகர் மாவட்ட, அ,ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், வரும், 22ம் தேதி காலை, 10:00 மணிக்கு, வயலுார், மணிமுத்து செல்வம் திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது.கூட்டத்திற்கு, தினகரன் தலைமை வகிக்க உள்ளார். கூட்டத்தில், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X