அரசியல் செய்தி

தமிழ்நாடு

கடனை அடைக்க கரும்பு ஜூஸ் கடை கடனாளியான தே.மு.தி.க., பெண் வேட்பாளர்

Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (11)
Advertisement
 கடனை அடைக்க கரும்பு ஜூஸ் கடை கடனாளியான தே.மு.தி.க., பெண் வேட்பாளர்

ஆத்துார்:நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு, கடனாளியான, தே.மு.தி.க., மாவட்ட மகளிரணி துணைச் செயலர், கடனை அடைக்க, சாலையோரம், கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்துார், வ.உ.சி., நகரைச் சேர்ந்த, சிவராஜ் மனைவி, மாது, 48; தே.மு.தி.க., மாவட்ட மகளிரணி துணைச் செயலர். 2006ல் நடந்த, உள்ளாட்சித் தேர்தலில், 31வது வார்டு கவுன்சிலருக்கு போட்டியிட்டு, தோல்வியடைந்தார்.மேலும், 2006, 2011, 2016ல், சட்டசபை தேர்தலில் போட்டியிட, 'சீட்' கேட்டு, கட்சியில் விருப்ப மனு அளித்தார்.கடந்த, 2011ல், உள்ளாட்சி தேர்தலின்போது, தே.மு.தி.க., சார்பில், நகராட்சி தலைவர் பதவிக்கு, போட்டியிட்டு, 3,575 ஓட்டுகள் பெற்று, தோல்வியடைந்தார். இத்தேர்தலில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல், கடன் வாங்கி செலவு செய்தார்.அந்த தேர்தலுக்குப் பின், அவருக்கு, கட்சியில், மாவட்ட மகளிரணி பொறுப்பு கிடைத்ததே தவிர, வாங்கிய கடனை அடைக்க, வழியில்லை. இதனால், துலுக்கனுார் ஊராட்சி, இந்திரா நகரில், வாடகைக் கட்டடத்தில், இரு ஆண்டாக, பெட்டி கடை வைத்துள்ளார். தற்போது, அதே கடைக்கு முன், கரும்பு ஜூஸ் வியாபாரம் செய்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
19-ஜூன்-201912:49:06 IST Report Abuse
Jayvee ஒழுங்கா இத முதலிலேயே செய்து இருந்தால் இந்நேரம் கடன் இல்லாத நிம்மதியான வாழக்கை வாழ்ந்துகொண்டிருக்கலாம்..
Rate this:
Share this comment
Cancel
S Ramkumar - Tiruvarur,இந்தியா
19-ஜூன்-201909:49:47 IST Report Abuse
S Ramkumar விஜயகாந்த் பாக்கெட்டுக்கு செல்லவில்லை என்று சொல்ல முடியாது. சுதீஷுக்கு சென்றிருக்க வாய்ப்பு உண்டு. தேமுதிகவெல்லாம் பத்து லட்சத்திற்கு பொருமானமா என்று சிந்தித்து இருக்க வேண்டும். என்றாலும் கடனை அடைக்க வேண்டும் என்று உழைக்கிறார். பாராட்ட வேண்டும். மேலும் தேர்தலுக்கு கட்சிக்கு செலவு செய்யாமல் இருக்க வேண்டுகிறோம். தி மு கவில் பத்து லட்சத்திற்கு ஒரு கவுசிலர் ஆகா கூட முடியாது. நகர தலைவருக்கு ம்ம்ம்ம்ம். அட போங்க.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
17-ஜூன்-201903:15:35 IST Report Abuse
meenakshisundaram பிரேமலதா & கோ இந்த வழியே செல்லும்போது துட்டு கொடுத்து ஜூஸ் சாப்பிட வேண்டும்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X