கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'கோ-ஆப் டெக்ஸ்' நிறுவனத்திற்கு ரூ11ஆயிரம் அபராதம்

Added : ஜூன் 16, 2019
Share
Advertisement
நாமக்கல், ஜூன் 16--நாமக்கல், 'கோ - ஆப்டெக்ஸ்' நிறுவனத்திற்கு, 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நுகர்வோர் குறைதீர் மன்றம் தீர்ப்பு வழங்கியது.நாமக்கல்லைச் சேர்ந்தவர் முத்துசாமி, 76. இவர், 2014 ஜன., 10ல், நாமக்கல், கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தில், இரண்டு ரசீதுகள் அடிப்படையில், 522 ரூபாய்க்கு ஜவுளி வாங்கினார்.அப்போது, 'புரட்சித் திட்டம், புதுமைத் திட்டம்' என்ற பெயரில், 1 கிலோ தங்கம் பரிசு

நாமக்கல், ஜூன் 16--நாமக்கல், 'கோ - ஆப்டெக்ஸ்' நிறுவனத்திற்கு, 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நுகர்வோர் குறைதீர் மன்றம் தீர்ப்பு வழங்கியது.
நாமக்கல்லைச் சேர்ந்தவர் முத்துசாமி, 76. இவர், 2014 ஜன., 10ல், நாமக்கல், கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தில், இரண்டு ரசீதுகள் அடிப்படையில், 522 ரூபாய்க்கு ஜவுளி வாங்கினார்.அப்போது, 'புரட்சித் திட்டம், புதுமைத் திட்டம்' என்ற பெயரில், 1 கிலோ தங்கம் பரிசு என்ற அறிவிப்பை, அங்கு பார்த்தார்.இதன்படி, '2,000 ரூபாய்க்கு மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு, 'கூப்பன்' தரப்படும்; அவை, குலுக்கல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, தங்க நாணயங்கள் பரிசளிக்கப்படும்' என, அதில் கூறப்பட்டு இருந்தது.'இது முறையற்ற வணிக நோக்கம்' என, தமிழ்நாடு பயனீட்டாளர் சங்கம் மூலமாக, நாமக்கல் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில், முத்துசாமி வழக்கு தொடர்ந்தார்.
பல கட்ட விசாரணைக்கு பின், மன்ற தலைவர் செங்கோட்டையன் மற்றும் இரண்டு உறுப்பினர்கள், சமீபத்தில் தீர்ப்பளித்தனர்.அதில், 'எதிர்காலத்தில் குலுக்கல் முறையிலான பரிசுத் திட்டத்தை, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தக் கூடாது. முறையற்ற வணிகத்தில் ஈடுபட்டதற்காக, அந்நிறுவனத்துக்கு, 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது' என, கூறியுள்ளனர்.மேலும், 'அத்தொகையை, நுகர்வோர் சேமநல நிதிக்கு வழங்க வேண்டும். முறையீட்டாளருக்கு, செலவுத் தொகையாக, 3,000 ரூபாய் வழங்கவும், இரண்டு மாதங்களில் வழங்காவிட்டால், 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்' எனவும், தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X