விராட்கோஹ்லி பேட்டி : ஒளிபரப்பு உரிமத்தை இழக்கிறது தூர்தர்ஷன்?

Updated : ஜூன் 16, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

மான்ஸ்செஸ்டர்: ஐ.சி.சி.,விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட இந்தியாவின் தூர்தர்ஷன் சிக்கலில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.



latest tamil news




இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி இன்று மான்ஸ்செஸ்டர் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதனை முன்னிட்டு இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் பேட்டிஒன்று இந்தியாவின் தூர்தர்ஷன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. போட்டி துவங்கும் முன்னரோ அல்லது முடிந்த பின்னரோ அணியின் கேப்டனிடம் பேட்டி எடுக்க கூடாது என்பது ஐ.சி.சியின் விதிகளுள் ஒன்றாகும். இதனை மீறி விராட் கோஹ்லியின் பேட்டியை இந்தியாவின் தூர்தர்ஷன் டிவி ஒளிபரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதைனையடுத்து துார்தர்ஷன் நிறுவனம் அடுத்து வரும் போட்டிகளை நேரடியாக ஒளிப்பரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கிரிக்கெட் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்ய இயலாத சூழலில் இந்தியாவின் அரசுக்கு சொந்தமான டி.வி சிக்கலில் சிக்கி உள்ளது . துார்தர்ஷன் இத்தகைய சிக்கலில் சிக்குவது என்பது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.


latest tamil news




இது குறித்து விளக்கம் அளித்துள்ள தூர்தர்ஷன் நிறுவனம் இது செய்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடையே தவிர ஒளிபரப்பிற்காக விதிக்கப்பட்ட தடை அல்ல .எனவே தொடர்ந்து வரும் போட்டிகளை ஒளிபரப்புவதில் எவ்வித தடையும் ஏற்படாது என தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
16-ஜூன்-201910:26:17 IST Report Abuse
தமிழ் மைந்தன் இந்த உச்சி என்பது கடவுளின் மறு அவதாரம்?..... எங்கள் நாட்டு வீரர்கள் விளையாடுவதை நாங்கள் மட்டுமே ஒளிபரப்புவோம்.....மற்ற போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பு செய்ய அனுமதி இல்லை என அரசு சொல்லட்டும்.........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X