பொது செய்தி

தமிழ்நாடு

களமிறங்குவோம் நமக்கு நாமே!

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (68)
Advertisement
களமிறங்குவோம், நமக்கு நாமே,

வாசகர்களாகிய முதலாளிகளுக்கு வணக்கம்.

நீர்நிலைகளைப் பாதுகாத்தால் தான், நாடு வளமையாக இருக்கும் என்பது, அனைவருக்கும் தெரியும். மன்னர் காலத்தில், மக்களே, அவரவர் பகுதி நீர்நிலைகளைப் பாதுகாத்தனர் என்பது வரலாறு.மக்களாட்சி வந்த பின், அரசே மக்களின் நலன்களைப் பாதுகாப்பது, உலக நடைமுறையானது. ஆனால், இப்போதுள்ள நிலையில், அரசை நம்பி பலன் இல்லை என்று புரிந்து விட்டது.






தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை என்ற நிலை, தமிழ்நாட்டில் உருவாகி விட்டது. எனவே, இனி அரசை நம்பி நாம் இராமல், களத்தில் இறங்குவோம். 'நம் பகுதியை நாம் பாதுகாப்போம்' என்று சூளுரைத்து, நலச் சங்கம் உருவாக்கி, அக்டோபரில், வடகிழக்குப் பருவ மழை துவங்குவதற்குள், நீர்நிலைகளைத் துார்வாரித் தண்ணீர் தேக்கத் தயார்படுத்துவோம். ஊராட்சி அதாவது, கிராம பஞ்சாயத்து வாரியாக, சங்கம் உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே சிறப்பாகச் செயல்படும் சங்கங்கள் ஒருங்கிணையலாம். அரசியல்வாதிகள் தலையீட்டை முற்றிலும் தவிர்ப்போம். நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில், உங்களில் யாராவது தலைமை ஏற்று, சங்கம் உருவாக்கி, வழி நடத்த முன்வந்தால், எங்களுக்கு, அதை உங்கள் மொபைல் போன் எண்ணுடன், அறிக்கையாக தயார் செய்து அனுப்பி வையுங்கள்.





அந்த அறிக்கையை, நம் நாளிதழில் வெளியிட்டு, உங்களுடன் தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கச் செய்வோம். ஒவ்வொரு ஊராட்சியிலும் நடக்கும் பணிகள் குறித்து, தொடர்ந்து செய்தி வெளியிடுவோம். நம் குறிக்கோள், தமிழக மக்கள் இனி தண்ணீருக்காக அவதிப்படக் கூடாது என்பது மட்டுமே!
முழுக்க முழுக்க சேவை மனப்பான்மையுடன் ஈடுபடுவோர் மட்டுமே இந்த மாபெரும் பணிக்குத் தேவை என்பதால், எங்கள் முதலாளிகளாகிய நீங்கள், இதற்கு முன்வருவீர்கள் என்பதை மனப்பூர்வமாக நம்புகிறேன்.

தொடங்குங்கள் உங்கள் சேவையை!

- ஆசிரியர்.
அறிக்கை அனுப்ப வேண்டிய முகவரிகள்:

இ-மெயில்: cniwater@dinamalar.in
அல்லது
களமிறங்குவோம் நமக்கு நாமே,
தினமலர்,
39, ஒயிட்ஸ் ரோடு,
சென்னை - 600014
இ - மெயில்:cbewater@dinamalar.in
அல்லது
களமிறங்குவோம் நமக்கு நாமே,
தினமலர்,
டி.வி.ஆர். ஹவுஸ்,
சுந்தரபுரம்,
கோவை - 641 024

இமெயில் முகவரி: mdureporting@dinamalar.in
அல்லது
களமிறங்குவோம் நமக்கு நாமே,
தினமலர்
டி.வி.ஆர்.ஹவுஸ்,
தினமலர் அவென்யூ,
மதுரை 625016.

இமெயில்: pdyreporting@dinamalar.in
அல்லது
களமிறங்குவோம் நமக்கு நாமே,
தினமலர்,
டி.வி.ஆர்., ஹவுஸ்,
தட்டாஞ்சாவடி,
புதுச்சேரி - 605009

Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
17-ஜூன்-201910:59:28 IST Report Abuse
S.P. Barucha மணல் குவாரி மீது தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு” அருமையான தீர்ப்பு.ஒட்டு மொத்த தமிழகத்தையே மணல் அள்ளி, இயற்கையின் ஒட்டு மொத்த நீர் ஆதாரத்தை சீரழித்து விட்டனர். இயற்கையை பாதுகாத்தால்தான் நம்மை இயற்கை பாதுகாக்கும் . பருவ மழையை பொய்க்கும் அளவிற்கு மணல் குவாரிகள் மணல் அள்ளி விற்பனை செய்தது மன்னிக்க முடியாத மிக பெரிய குற்றம். இயற்கை வளத்தை பாதுகாக்க தவறிய தமிழக அரசும் மற்ற அரசியல் கட்சிகளும் , விவசாய சங்கங்களும் கர்நாடகாவை குறை சொல்வது மிக பெரிய தவறு. தமிழக ஆறுகளில் மிக அதிக எண்ணிக்கையில் மணல் குவாரிகள் அமைத்து அளவிற்கு அதிகமாக மணல் அள்ளுவதால் இயற்கையில் என்ன பாதிப்பு ஏற்படும் என்பது கூட அரசியல் வாதிகளுக்கும் ஆளும் கட்சியினருக்கும். தெரியவில்லை. நீதிமன்றம் இயற்கை சார்ந்த வழக்குகளை சம்பந்தப்பட்ட விஞ்ஞான துறை வல்லுநர்களை வைத்து ஆய்வறிக்கை பெறவேண்டும்.இனி தமிழகத்திற்கு எப்போது பருவமழை அந்தந்த காலத்தில் பெய்யும் என சொல்ல முடியாது. மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படும், இயற்கையை கொள்ளை அடித்தால் நாடே அழிந்துவிடும் என்பதற்கு மணல் கொள்ளை ஒரு சிறந்த உதாரணம். ஊர் சுற்றுபவர்களெல்லாம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததன் விளைவுதான் ஒட்டுமொத்த தமிழகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு. எப்படித்தான் அறிவே இல்லாமல் மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டதோ?
Rate this:
Share this comment
Cancel
16-ஜூன்-201922:27:38 IST Report Abuse
ஓசிக்கு அலையும் தமிழன் இது மாறி காமடி இன்னும் நிறையா பண்ணுங்க....
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
17-ஜூன்-201902:36:59 IST Report Abuse
Anandanயோவ், நீ கூஜா தூக்குற அதிமுக ஆட்சியை கலாய்க்குறாங்க....
Rate this:
Share this comment
Cancel
16-ஜூன்-201922:27:17 IST Report Abuse
ஓசிக்கு அலையும் தமிழன் ஹஹஹஹா நல்லா ஜோக்கா இருக்குங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X