பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீர்... தண்ணீர்! தவிக்கும் தமிழகம்; தினமலர் போட்டோ... சவால்!

Updated : ஜூன் 16, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
காட்சியை கண்முன் நிறுத்தும் சிறந்த புகைப்பட கலைஞரா நீங்கள்? உங்களுக்கு ஒர் சவால். போதிய மழையின்றி, தமிழகத்தின் பல மாவட்டங்கள் தண்ணீருக்கு தவித்து கொண்டிருக்கின்றன. வறட்சியின் அகோர முகத்தை உலகுக்கு உணர்த்த, உன்னதமான வாய்ப்பை அளிக்கிறது தினமலர்.வறட்சியால் பாதிக்கப்படும் மக்களின் தவிப்பை, மட்டுமின்றி பிற உயிரினங்களின் தவிப்பையும், இதயத்தை தொடும் வகையில், புதிய
தண்ணீர்,தண்ணீர், தவிக்கும் தமிழகம், தினமலர் போட்டோ, சவால்

காட்சியை கண்முன் நிறுத்தும் சிறந்த புகைப்பட கலைஞரா நீங்கள்? உங்களுக்கு ஒர் சவால். போதிய மழையின்றி, தமிழகத்தின் பல மாவட்டங்கள் தண்ணீருக்கு தவித்து கொண்டிருக்கின்றன. வறட்சியின் அகோர முகத்தை உலகுக்கு உணர்த்த, உன்னதமான வாய்ப்பை அளிக்கிறது தினமலர்.

வறட்சியால் பாதிக்கப்படும் மக்களின் தவிப்பை, மட்டுமின்றி பிற உயிரினங்களின் தவிப்பையும், இதயத்தை தொடும் வகையில், புதிய கோணத்தில், உங்களின் கேமராவில் படம் பிடித்து எங்களுக்கு அனுப்புங்கள். ஆச்சரியப்பரிசு காத்திருக்கிறது. அது மட்டுமல்ல... நீங்கள் எடுத்த புகைப்படம், உங்கள் பெயருடன் 'தினமலர்' நாளிதழில் வெளியாகி 'சிறந்த புகைப்பட கலைஞர்' என்ற அங்கீகாரத்தை பெற்றுத்தரும்!


latest tamil newsதேர்வு பட்டியலில் இடம்பெறாத படங்கள், தினமலர் டாட்.காம் இணையதளத்தில் இடம்பிடித்து, உலக அளவில் பல லட்சம் வாசகர்களை சென்றடையும்.

முதல் பரிசு: ரூ.25,000
2ம் பரிசு: ரூ.15,000
3ம் பரிசு: ரூ.10,000
சிறப்பு பரிசு: ரூ.2,000(25 நபர்களுக்கு)நிபந்தனை* புகைப்படத்தின் பைல் சைஸ் குறைந்தது 2 MB இருக்க வேண்டும்.

* பிறர் எடுத்த/ இணையதள படங்கள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.

* தினமலர் ஊழிர்கள் பங்கேற்க இயலாது

* ஆசிரியர் / தேர்வுக்குழு முடிவே இறுதியானது

* போட்டி தொடர்பாக தனிப்பட்ட கடிதம் / தொடர்பு கூடாது
* படங்களை அனுப்ப கடைசி நாள் ஜூன் 23
* தமிழகத்தில் வசிப்பவர்கள் மட்டும் புகைப்படத்தை அனுப்பலாம்.
படங்களை 'அப்லோடு' செய்ய வேண்டிய இணையதள முகவரி: www.dinamalar.com/water/

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
17-ஜூன்-201910:40:20 IST Report Abuse
S.P. Barucha மணல் குவாரி மீது தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு” அருமையான தீர்ப்பு. ஒட்டு மொத்த தமிழகத்தையே மணல் அள்ளி, இயற்கையின் ஒட்டு மொத்த நீர் ஆதாரத்தை சீரழித்து விட்டனர். இயற்கையை பாதுகாத்தால்தான் நம்மை இயற்கை பாதுகாக்கும். பருவ மழையை பொய்க்கும் அளவிற்கு மணல் குவாரிகள் மணல் அள்ளி விற்பனை செய்தது மன்னிக்க முடியாத மிக பெரிய குற்றம். இயற்கை வளத்தை பாதுகாக்க தவறிய தமிழக அரசும் மற்ற அரசியல் கட்சிகளும் , விவசாய சங்கங்களும் கர்நாடகாவை குறை சொல்வது மிக பெரிய தவறு. தமிழக ஆறுகளில் மிக அதிக எண்ணிக்கையில் மணல் குவாரிகள் அமைத்து அளவிற்கு அதிகமாக மணல் அள்ளுவதால் இயற்கையில் என்ன பாதிப்பு ஏற்படும் என்பது கூட அரசியல் வாதிகளுக்கும் ஆளும் கட்சியினருக்கும். தெரியவில்லை. நீதிமன்றம் இயற்கை சார்ந்த வழக்குகளை சம்பந்தப்பட்ட விஞ்ஞான துறை வல்லுநர்களை வைத்து ஆய்வறிக்கை பெறவேண்டும்.இனி தமிழகத்திற்கு எப்போது பருவமழை அந்தந்த காலத்தில் பெய்யும் என சொல்ல முடியாது. மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படும், இயற்கையை கொள்ளை அடித்தால் நாடே அழிந்துவிடும் என்பதற்கு மணல் கொள்ளை ஒரு சிறந்த உதாரணம். ஊர் சுற்றுபவர்களெல்லாம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததன் விளைவுதான் ஒட்டுமொத்த தமிழகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு. எப்படித்தான் அறிவே இல்லாமல் மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டதோ?
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
17-ஜூன்-201910:37:52 IST Report Abuse
Jayvee வீராணம் மற்றும் அணைப்பகுதிகளில் ஏரி பகுதிகளில் (அந்தந்த மாவட்டங்களில்) ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய அரசு ஆவண செய்யவேண்டும்.. இந்த ஆழ்துளை கிணறுகளை மழை நீர் சேமிப்பு ஆதாரமாக மாற்றவும் ஆவண செய்யவேண்டும்.. உதவிக்கு ராணுவ பொறியாளர்களை அழைத்து கொள்ளவேண்டும் தவிர தனியாருக்கு தாரைவார்க்க கூடாது
Rate this:
Cancel
NAGHARAJAN S N - chennai,இந்தியா
17-ஜூன்-201908:54:13 IST Report Abuse
NAGHARAJAN S N 16/06/19 தினமலரில் "களமிறங்குவோம் நமக்கு நாமே " வாசகர்களை முதலாளி என வர்ணித்தது எனக்கு மிகவும் மன நெகிஷ்ச்சி ஏற்படுத்தியது . இந்த ஏற்பாடு நடைமுறைக்கு வர எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு அருள்மழை பொழிய என் நெடுஞ்சாண் உடம்பை வீழ்த்தி வணங்குகிறேஎன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X