பொது செய்தி

தமிழ்நாடு

கிணற்றுக்கு உயிர் கொடுத்த விவசாயி

Updated : ஜூன் 16, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுக்கோட்டை: புதுக்கோட்டை, ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர், வீரமணி, 35; விவசாயி. தண்ணீர் பிரச்னையால் கஷ்டப்பட்டு வந்த இவர், தன் வீட்டின் முன், தண்ணீர் வற்றிய கிணற்றை, மண் போட்டு மூடினார்.பின், கிணற்றை மீண்டும், 20 அடி தோண்டி, அடியில் சிமென்ட் தளம் அமைத்து, கிணற்றின் மேற்பரப்பில் சிமென்ட் மூடிகள் போட்டு மூடினார்.தன் வீட்டின் கூரையில் விழும் மழை நீரை,
 கிணற்றுக்கு உயிர் கொடுத்த விவசாயி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை, ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர், வீரமணி, 35; விவசாயி. தண்ணீர் பிரச்னையால் கஷ்டப்பட்டு வந்த இவர், தன் வீட்டின் முன், தண்ணீர் வற்றிய கிணற்றை, மண் போட்டு மூடினார்.

பின், கிணற்றை மீண்டும், 20 அடி தோண்டி, அடியில் சிமென்ட் தளம் அமைத்து, கிணற்றின் மேற்பரப்பில் சிமென்ட் மூடிகள் போட்டு மூடினார்.தன் வீட்டின் கூரையில் விழும் மழை நீரை, பிளாஸ்டிக் குழாய்கள் மூலம், கிணற்றுக்கு கொண்டுசென்று, இலைகள், துாசிகள் தொட்டிக்குள் செல்லாமல், மூன்று இடங்களில் சல்லடை அமைத்து, தண்ணீரை சுத்தப்படுத்தி, கிணற்றுக்குள் விழுமாறுஅமைத்துள்ளார்.அந்த தண்ணீரை, மின்மோட்டார் மூலம், தேவைக்கு ஏற்ப, வீட்டுஉபயோகத்திற்காகவும், விவசாயத்திற்காகவும் பயன்படுத்தி வருகிறார்.

விவசாயி வீரமணிகூறியதாவது:என் தோட்டத்தில், 400 அடிக்கு, ஆழ்குழாய் கிணறு உள்ளது. இதில்,பல ஆண்டுகளாக தண்ணீர்இல்லாமல், விவசாயம் பொய்த்துப் போனது.குடிநீருக்கும், கால்நடைக்கும், தண்ணீருக்காக பல இடங்களுக்கு அலைந் தோம். என் வீட்டருகே இருந்த பழைய கிணற்றில், மழைத் தண்ணீரைசேமிக்க திட்டமிட்டேன். பலரும் கேலி செய்தனர்.அதை நான் பொருட்டாக கருதவில்லை. கஜா புயலுக்கு முன், தொட்டி கட்டும் பணிகள்அனைத்தும் முடிந்தன.புயலின் போது, மழை நீரால், தொட்டி நிரம்பியது. அந்த நேரத்தில் மின்சாரம் இல்லாததால், ஆழ்குழாய் கிணறுகளும் இயங்கவில்லை.இதனால், சேகரிக்கப்பட்ட மழைநீர், எனக்கு மட்டுமின்றி, சுற்றியுள்ள, 30 குடும்பங்களுக்கும் பயன்பட்டது.

புயலின் போது சேமித்த மழைநீர், மூன்று மாதங்கள் வரை பயன்பட்டது.அதன்பின் மழைஇல்லாததால், தண்ணீரை விலைக்கு வாங்கி, மழை நீர் சேமிப்பு தொட்டியில் நிரப்பி வைத்துக் கொண்டேன். இன்னும், மூன்று மாதங்களுக்கு தண்ணீர் பிரச்னை இருக்காது. இவ்வாறு செய்வதால், குடிநீர் தேவை பூர்த்தி அடைவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயரவும் வழிவகை ஏற்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
22-ஜூன்-201904:35:32 IST Report Abuse
 nicolethomson வாழ்த்துக்கள் சார்
Rate this:
Cancel
Naren - Chennai,இந்தியா
16-ஜூன்-201916:53:53 IST Report Abuse
Naren தண்ணீர் இல்லாமல் வற்றி போன கிணறுகளை மழை நீர் சேகரிப்பு தொட்டிகளாக பயன்படுத்துவது மிகவும் நல்ல யோசனை... இதை படித்தவர்கள் இது போன்ற கிணறுகள் உள்ளவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லவும்...
Rate this:
Cancel
16-ஜூன்-201913:24:35 IST Report Abuse
ருத்ரா சிந்தித்து செயல் படுகிறார். பாராட்டுக்கள். நாமும் அவரை பின்பற்றலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X