குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி: வரும் 19ல் கரூரில் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி: வரும் 19ல் கரூரில் துவக்கம்

Added : ஜூன் 16, 2019
Share
கரூர்: கரூர் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு இலவசப் பயிற்சி வகுப்பு வரும், 19 முதல் துவங்குவதாக, கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரூர் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதன்படி

கரூர்: கரூர் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு இலவசப் பயிற்சி வகுப்பு வரும், 19 முதல் துவங்குவதாக, கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரூர் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதன்படி டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வரும், 19 முதல் தொடங்குகிறது. இதில் இலவச பாடக் குறிப்புகள், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், வேலைவாய்ப்பகத்தை நேரில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X