அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் சம்மான் நிதித் திட்டம்

Added : ஜூன் 16, 2019 | |
Advertisement
கரூர்: கிசான் சம்மான் நிதித் திட்டம், அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் கவிதா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் கடந்த பிப்., 24 முதல் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உயர்

கரூர்: கிசான் சம்மான் நிதித் திட்டம், அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் கவிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் கடந்த பிப்., 24 முதல் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உயர் வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்டவர்கள் தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேரலாம். கிராம நிர்வாக அலுவலரிடம், ஆதார் எண், வங்கி கணக்கு எண், பட்டா எண், ரேஷன் கார்டு மற்றும் மொபைல் எண் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும், வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இதுவரை நிலமானது இறந்த தனது தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால் அதற்குரிய வாரிசுதாரர், சம்பந்தப்பட்ட பகுதியின் வட்டாட்சியரை அணுகி உரிய முறையில் விண்ணப்பித்து வரும், 30க்குள் பட்டா மாறுதல் செய்து, அதன் அடிப்படையில், இத்திட்டத்தில் சேரலாம். இதற்கென வரும், 18 முதல், 25 வரை, அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடக்கும் ஜமாபந்தி நாட்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X