பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் திருடுகிறதா, டி.என்.பி.எல்., நிறுவனம்?

Updated : ஜூன் 16, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (6)
Advertisement
தண்ணீர், டி.என்.பி.எல்., நிறுவனம்

கரூர்:காவிரி ஆற்றில், குடிநீருக்காக திறந்து விடப்படும் தண்ணீரை, டி.என்.பி.எல்., ஆலை நிர்வாகம் திருடுவதாக, புகார் எழுந்து உள்ளது.

கரூர் மாவட்டம், புகளூரில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையான, டி.என்.பி.எல்., நிறுவனம், 1984ல் துவக்கப்பட்டது. இங்கு, கரும்புச் சக்கையிலிருந்து, தினமும், 1,100 டன் காகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தின் தண்ணீர் தேவைக்காக, கட்டிபாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில், நீரேற்று கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, குடிநீருக்கு திறக்கப்படும் தண்ணீரை, காகித ஆலைக்கு, உறிஞ்சி எடுத்துக் கொள்வதால், கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு, ஆபத்து நேர்ந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.






இதுகுறித்து, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர், எஸ்.விஜயன் கூறியதாவது:காகித உற்பத்திக்கு, அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. இங்குள்ள ஆற்றில், தினமும், 2 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.ஆற்றில் மணல், கற்களை கொட்டி, அதன் போக்கை மாற்றி, டி.என்.பி.எல்., ஆலையின் நீரேற்று நிலையத்திற்கு, தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. அரசு நிறுவனம் என்பதால், பொதுப்பணித் துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், தண்ணீர் திருட்டை கண்டுகொள்வதில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
தவிட்டுபாளையத்தைச் சேர்ந்த, என்.நல்லசாமி கூறுகையில், ''மேட்டூர் அணையில் இருந்து, குடிநீர் தேவைக்கு திறக்கப்படும் தண்ணீரை, நீரோட்டத்தை மாற்றி, டி.என்.பி.எல்., நிர்வாகம் பயன்படுத்தி கொள்கிறது. ''இதனால், காவிரி ஆற்றை நம்பி உள்ள மாவட்டங்களில், கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்,'' என்றார்.
நான்கு மாதங்களுக்கு முன், காவிரி ஆற்றில், மணலை கொட்டி, நீரோட்டத்தை மாற்றி, காகித ஆலைக்கு தண்ணீர் எடுப்பதாக, புகார் வந்தது. உடனடியாக, மணல் குவியல் அகற்றப்பட்டது. மீண்டும், மணல் கொட்டி, ஆற்றின் போக்கை மாற்றுவதாக தெரிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்ரீதர்,
ஆற்று பாதுகாப்பு உதவிப் பொறியாளர்

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-ஜூன்-201905:03:40 IST Report Abuse
Cheran Perumal காகிதம் கூட வெளியில் இருந்து தருவித்துக்கொள்ளலாம். ஆனால் தண்ணீர்?
Rate this:
Share this comment
Cancel
16-ஜூன்-201921:19:09 IST Report Abuse
ஆப்பு தமிழகத்தில் இருக்குற வேலை வாய்ப்பு ஆலைகளில் டி.என்.பி.எல் லும் ஒண்ணு. அதுக்கும் ஆப்பு வெச்சிருங்க...எல்லோர் வருமாணமும் இரட்டிப்பாக்குறேன்னு வாக்கு கேக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
16-ஜூன்-201911:12:53 IST Report Abuse
Needhiyin Pakkam Nil சோமாலியாவின் வரலாறு தமிழ் நாட்டிற்கு பொருந்தும், துரும்பு விழும்போதே தடுத்து விடு இல்லையேல் இரும்பு விழும் போது உன் இனமே இல்லாமல் போய் விடும், இந்த நாட்டின் வளங்களை சட்டப்படி அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது தான் பசுமை தீர்ப்பாயம், மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கி கொண்டு இது ஒரு நாளும் இந்த நாட்டின் பசுமையை காத்தது கிடையாது, சாராய, குளிர்பான, தண்ணீர் பாட்டில், மற்றும் பெரும் தொழிசாலைகள் நிலத்தடி நீரை உறிஞ்ச அரசு தடை விதித்து சட்டம் கொண்டு வர வேண்டும் மேலும் இவைகள் அனைத்தும் கடல் நீரை சுத்தீகரித்து அதை பயன்படுத்த கொள்ள வலியுறுத்த வேண்டும், காசை சேமிப்பதை வீட வளங்களை சேமிப்பது தான் முக்கியம் என்று சொன்னால் எவன் கேட்கிறான்........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X