பொது செய்தி

இந்தியா

2024க்குள் வீடுகளுக்கு சுத்தமான குடிநீர்: மத்திய அரசு இலக்கு

Updated : ஜூன் 16, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (2)
Advertisement
சுத்தமான குடிநீர், மத்திய அரசு, இலக்கு

புதுடில்லி: இந்தியாவில் பலர் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில், வரும் 2024ம் ஆண்டிற்குள், அனைத்து வீடுகளுக்கும் பைப் மூலம் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
மத்திய அரசுக்கு, திட்டங்கள் தொடர்பான ஆலோசனை வழங்கும், நிடி ஆயோக் அமைப்பின், ஐந்தாவது நிர்வாகக் குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், தண்ணீர் பிரச்னையை தீர்க்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தண்ணீர் சேமிப்பு மற்றும் பாசனத்திற்கு, பொது மக்களுள் உதவியுடன் பெரிய அளவில் முயற்சி செய்ய வேண்டும். போதுமான அளவில் நீர் சேமிக்கப்படாததால், ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வரும் 2024ம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் பைப் மூலம் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.






நிடி ஆயோக் அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட அறி்கை ஒன்றில், சுத்தமான குடிநீர் கிடைக்காத காரணத்தினால், ஆண்டுதோறும் 2 லட்சம் இந்தியர்கள் மரணமடைவதாகவும், 60 கோடி பேர், கடுமையான தண்ணீர் பிரச்னையை சந்திப்பதாகவும் கூறியுள்ளது. போதிய அளவு மழை பெய்யாததால், மேற்கு மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூன்-201921:16:38 IST Report Abuse
ஆப்பு சோத்துக்கே லாட்டரியாம்...எலை பொத்தல்..எலை பொத்தல்னு ஒருத்தன் கூவுறானாம். முதல்ல தண்ணியக் கொண்டாங்க. வருணபகவான் இந்தியாக்கிட்டேருந்து தண்ணீரை கருப்பு பணம் மாதிரி எடுத்துக் கிட்டு ஓடிட்டாரு போலிருக்கு.
Rate this:
Share this comment
Cancel
16-ஜூன்-201915:50:26 IST Report Abuse
bugindia சத்தியமாக தமிழ் மக்களுக்கு கிடைக்காது. அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதி அவ்வளவுதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X