வில்லியாக ஆசை : நந்தினி கனவு| Dinamalar

வில்லியாக ஆசை : நந்தினி கனவு

Added : ஜூன் 16, 2019 | |
மான் விழி கண்ணழகி, வெண்ணெய் கட்டி பல்லழகி, கட்டான கட்டழகி, காட்டுமல்லி மொட்டழகி, இளமை சிணுங்கல் மொழியழகி, இளைஞர்கள் சிலிர்க்கும் சிலையழகி, விண்ணிலும் இல்லை இந்த பெண்ணழகி என கவிஞர்கள் வர்ணிக்கும் மாடலிங் நந்தினி தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்த போது...* சினிமா ஆசைசின்ன வயதில் இருந்தே சினிமா தான் எல்லாம். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டே சினிமாவில் வாய்ப்பு
வில்லியாக ஆசை : நந்தினி கனவு

மான் விழி கண்ணழகி, வெண்ணெய் கட்டி பல்லழகி, கட்டான கட்டழகி, காட்டுமல்லி மொட்டழகி, இளமை சிணுங்கல் மொழியழகி, இளைஞர்கள் சிலிர்க்கும் சிலையழகி, விண்ணிலும் இல்லை இந்த பெண்ணழகி என கவிஞர்கள் வர்ணிக்கும் மாடலிங் நந்தினி தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்த போது...
* சினிமா ஆசைசின்ன வயதில் இருந்தே சினிமா தான் எல்லாம். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடினேன். வாய்ப்பு தாமதமானாலும் ஆசை குறையவே இல்ல. இப்போ மாடலிங் செய்கிறேன்.
* நடித்தவை'96' படத்தில் பள்ளி காலத்து திரிஷாவின் தோழியாக வாய்ப்பு வந்தது. சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. சினிமா பாடல்கள் ரிலீஸானதும் நாங்களாகவே அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ (கவர் சாங்) வெளியிடுவோம். சில நேரங்களில் படத்தில் வரும் பாடல் வீடியோக்களை விட எங்கள் வீடியோக்களுக்கு லைக் அள்ளும். கவர் சாங், குறும்படங்களை இயக்கி நடிக்கிறேன்.
* நடிகர்கள்நடிப்பில் திறமையுடையவர்களை தேடி பிடித்து நடிக்க வைத்திடுவோம். இதற்காக ரூ.20 முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகும். பணம் இருந்தால் தான் நம்ம திறமையை கூட வெளி உலகத்திற்கு கொண்டு வர முடியும்.
* உங்க திறமைநடிப்பு மற்றும் போட்டோகிராபி மட்டும் தான். சினிமாவில் வில்லி கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறேன். படம் முழுவதும் வரும் ஹீரோயினை விட வில்லிக்கு தான் 'மாஸ்' அதிகம். சீக்கிரமா மக்கள் மனதிலும் இடம் பிடிக்கலாம். ரொம்ப பிடித்த நடிகை நயன்தாராதான்.
* போட்டோகிராபிபோட்டோகிராபி சாதாரண விஷயம் இல்ல. எல்லோரும் சாதாரணமா பார்க்குறதை நம்ம வித்யாசமா பார்க்கணும். அதை அழகா படம் பிடிச்சு காட்டணும். வீடியோ எடிட்டிங்கும் பண்ணுவேன். இது மூலமாக கிடைக்கும் பணத்தில் தான் பாடல், குறும்படம் தயாரிக்கிறேன்.
* அவ்ளோதானாஎன்ன இப்படி கேட்டுட்டீங்க. எனக்கு டான்ஸ் நல்லா வருமே. மாஸ்டர் பிரபுதேவாவுக்கே சவால் விடுவேன். காமெடி கொஞ்சம் கொஞ்சம் வரும். கல்லுாரியில் படிக்கும் போது காமெடி பண்ணி எல்லோரையும் கலாய்ச்சது உண்டு. இன்னொன்று சொல்லியே ஆகணும்... பேச ஆரம்பிச்சா... நிறுத்தவே மாட்டேன்.
* கனவுஅப்பவும் இப்பவும் எப்பவும் சினிமாவில் நடிக்கணும். சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது சுலபமில்லை. இருந்தாலும் பரவாயில்லை படத்தில் நடிக்கணும். சின்னதா மக்கள் மனதில் இடம் பிடிக்கணும். இது போதுங்க.
* சாதிக்க வழிவழி இருக்குதோ இல்லையோ நாமதாங்க முன்னேறி போகணும். தடையை உடைச்சிட்டு பெண்கள் வெளியே வரணும். பெண்களுக்கு பிரச்னை இல்லாத இடமே இல்லை. திறமை, சாதிக்கணும்னு வெறி இருந்தா வெற்றி நமக்கு தான்.வாழ்த்த nnandhusasi24@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X