பொது செய்தி

இந்தியா

மூளைக்காய்ச்சல் பலி 100 ஐ தாண்டியது

Updated : ஜூன் 16, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (3)
Advertisement

பாட்னா : பீகாரில் முஷாபர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது. மருத்துவமனைகளில் போதுமான டாக்டர்களோ, முறையான ஏற்பாடுகளோ இல்லை என்று குழந்தைகளின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.பீகார், முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் குழந்தைகளை இந்த நோய் தாக்கியது. அதிலிருந்து இதுவரை இந்த நோய் பாதிக்கப்பட்டு முதலில் 130 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது.

'அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்' மற்றும் 'ஜப்பான் என்சபிலிட்டிஸ்' என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.பலி எண்ணிக்கை 111


இதுவரை கிருஷ்ணா மருத்துவமனையில் மட்டும் 84 பேர் பலியாகினர். கெஜ்ரிவால் மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் இறந்து மொத்தம் 14 பேர் பலியாகியுள்ளனர். வைஷாலி மருத்துவமனையில் 10 குழந்தைகள், 2 பேர் மோதிஹரியிலும் ஒரு குழந்தை பெகுசாராயிலும் பலியாகியுள்ளனர். இதனால், குழந்தைகளின் பலி எண்ணிக்கை, 111 ஐ தொட்டுள்ளது, பொதுமக்களிடையே அச்சத்தையும் கவலையும் ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு மக்களை பீதிக்குள்ளாக்கி இருக்கிறது. இதைத் தொடர்ந்து நிலைமையை ஆராய்வதற்காக மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


மத்திய அமைச்சர் விரைவு :


பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் முஷாபர்பூர் சென்று, பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்வையிட உள்ளார். முன்னதாக அவர் பீகார் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பாட்னாவில் ஆலோசனை நடத்தினார்.


குற்றச்சாட்டு :இதனிடையே முஷாபர்பூர் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் போதுமான டாக்டர்களோ, மருந்துகள், படுக்கைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் இல்லை என்றும், ஒவ்வொரு மணி நேரத்திலும் குழந்தைகள் இறப்பதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று இரவில் 12 மணிக்கு டாக்டர், நர்ஸ் என எவரும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
17-ஜூன்-201906:09:39 IST Report Abuse
oce மூளைக்கு அதி உஷ்ணம் ஏன் வருகிறது. அடிக்கடி தலையில் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி உஷ்ணத்தை ஆற்ற வேண்டும். குளிர் பிரதேசங்களில் வசிப்பவர்கள் மூளையை இயக்கும் உஷ்ணம் குளிரில் வேளியேறாமல் தடுக்க தலைப்பாகை கட்டலாம். உஷ்ண பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு அது தேவை இல்லை. உஷ்ணத்தை அதிக அளவு மூளையில் தேக்கினால் காய்ச்சல் வரக்கூடும்.
Rate this:
Share this comment
Cancel
Velusamy Ramesh - Thanjavur,இந்தியா
16-ஜூன்-201915:22:29 IST Report Abuse
Velusamy Ramesh pranic healing is one of the native technique to employ and save the kids.
Rate this:
Share this comment
Cancel
Diya -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜூன்-201911:23:54 IST Report Abuse
Diya Doctors please find some ways to treat the affected kids. Mistakes made by adults has nothing to do with these innocent kids. Also please do not wait for government or your hospital, you should be some association with which you can decide to do the social service.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X