லோக்சபா நாளை கூடுகிறது; பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

Updated : ஜூன் 16, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி : 17வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் நாளை(ஜூன் 17) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.







லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு கடந்த 30ந் தேதி ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் நாளை(ஜூன் 17) தொடங்குகிறது. இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பா.ஜ., எம்.பி. வீரேந்திரகுமார், புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.





இரண்டு நாட்கள் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின், 19ஆம் தேதி சபாநாயகர் தேர்வு நடைபெறும். வரும் 20ந் தேதி பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார். ஜூலை 5 ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.


அனைத்து கட்சி கூட்டம்


இதனிடையே, பார்லிமென்ட்டை சுமூகமாக நடத்துவது குறித்து டில்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, அர்ஜூன் ராம் மேக்வால், ராஜ்நாத் சிங், காஙகிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சுதீப் பந்தோபத்யாயா, டெப்ரிக் ஓ பிரையன், தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட குலாம் நபி ஆசாத், வேலைவாய்ப்பின்மை, பத்திரிகை சுதந்திரம், விவசாய பிரச்னை குறித்து கேள்வி எழுப்பியதுடன்,பார்லிமென்டில் விவாதிக்க வேண்டும் எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
16-ஜூன்-201916:43:20 IST Report Abuse
Endrum Indian திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சுதீப் பந்தோபத்யாயா, டெப்ரிக் ஓ பிரையன் இந்த மீட்டிங்கில் கலந்து கொள்ளக்கூடாது என்று சொல்லியும் கலந்து கொண்ட படியால் அவர்களை கட்சியிலிருந்து நீக்குகின்றேன்- இப்படிக்கு முஸ்லீம் பேகம் மும்தாஜ் அறிவிப்பு என்று வந்தாலும் வரும் நாளை மறுநாள் பத்திரிகையில்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X