வழி விட்டார் வருண பகவான்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வழி விட்டார் வருண பகவான்

Updated : ஜூன் 16, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (9)
Share

லண்டன் : வேறு எந்த விளையாட்டிற்கும் இத்தனை ரசிகர்கள் இல்லை, விளம்பரம் இல்லை, எதிர்பார்ப்பில்லை, ஏமாற்றமில்லை. அத்தனை உணர்வுகளையும் மொத்தமாய் குவித்து எல்லோரும் காத்திருப்பது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே, இன்று (ஜூன் 16) நடக்க உள்ள உலககோப்பை கிரிக்கெட் போட்டியைத் தான். ஆனால், மழை வந்து போட்டிக்கு இடையூறு ஏற்படுமோ என்ற அச்சம் நீங்கியது.


latest tamil news





15 கோடிப்பேர் :


இங்கிலாந்தின் மான்ஸ்செஸ்டர் நகரில் உள்ள ஸ்டாண்ட் போர்டில் வருணபகவான் மனது வைத்தால் மகிழ்வான விளையாட்டு விருந்த காத்திருக்கிறது. எந்தவொரு விளையாட்டு போட்டியை விடவும் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி என்றால், 15 கோடிப்பேர் உலகம் முழுவதும் பார்வையாளர்கள்.


4-5 மடங்கு கூடுதல் ;


இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் 800 மடங்கு வரையில் டிக்கெட் விலை அதிகரித்து விடுகிறது. மழை அச்சுறுத்தலிலும் 4 முதல் 5 மடங்கு டிக்கெட் விற்பனை மற்ற போட்டிகளை விடவும் அதிகரித்து விடுகிறது. இந்த உலகோப்பையில் ஐரோப்பாவின் பரம கிரிக்கெட் வைரிகளான இங்கிலாந்து- ஆஸ்திரேலியா மோதிய போதே, 60 சதவீதம் டிக்கெட் விலைகள் குறைந்தன. எனவே, கிரிக்கெட் உலகில் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு ஈடு இணையில்லை என்கின்றனர், வர்த்தகர்கள்.


latest tamil news





ஒரு லட்சம் பேர் ;


மான்செஸ்டர் கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகையில், ''இன்றைய போட்டிக்கு ஆசியா கண்டத்திலிருந்து மான்செஸ்டருக்கு 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரையில் வருவார்கள். அதில், 70 சதவீதம் பேர் இந்தியர்கள். அவர்களில் ஒவ்வொருவரும் 3.5 லட்சத்திலிருந்து 4.5 லட்சம் வரை செலவிடுவார்கள். அதில் பலர் வருத்தத்தோடும் செல்வார்கள்.

இந்தப்போட்டிக்கு மட்டும் உலகம் முழுவதும் 15 கோடி பார்வையாளர்கள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து ஜெர்மனி அல்லது ஜெர்மனி பிரான்ஸ் கால்பந்து போட்டிக்கு கூட இத்தனை பார்வையாளர்கள் கிடையாது. பிபிசி ஒலி,ஒளி பரப்பிலேயே பெரும் நேரத்தை இந்தப் போட்டிதான் எடுத்தக்கொண்டது.


வணிகம் அதிகம் :


டி.வி, விளம்பர கட்டணங்கள் இந்தியா பங்கேற்கும் ஒரு போட்டி என்றால், 10 முதல் 12 லட்சம் ரூபாய் என்றால், இந்தியா பங்கேற்காத போட்டிக்கு 3 - 4 லட்சம் தான். அதுவே இந்தியா பாகிஸ்தான் போட்டியென்றால், 25 முதல் 35 லட்சம் வரையில் எகிறிவிடும். அத்தனை வணிகம் கொட்டிக்கிடக்கிறது, இந்தப்போட்டியில்...



latest tamil news





6 முறை வெற்றி :


இத்தனை எதிர்பார்ப்பிற்கும் காரணம் என்று வல்லுநகர்கள் கூறுவது, ஒன்று இந்தியா பாகிஸ்தான் அரசியல். மற்றொன்று தொடர்ந்து உலககோப்பையில் இதுவரை பாகிஸ்தானை 6 முறையும் வென்றுள்ளது. 1999 ல் இங்கிலாந்து, 2003 ல் தென்னாப்பிரிக்கா, 1992, 2015 ல் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் 1996 , 2011 ஆண்டுகளில் உலககோப்பை போட்டிகளில் இந்தியாவின் தொடர்ச்சியான வெற்றிகளும் ஒரு காரணம்.


100கோடி நஷ்டமாகும்...


இந்தப்போட்டி மழையால் நடக்காமல் போனால், அத்தனை எதிர்பார்ப்பும், காத்திருப்பும், மகிழ்வும், அலையடிக்கும் உணர்ச்சியும் ஏமாற்றத்திற்குள்ளாகும். அதுமட்டுமில்லை, 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வணிகமும் பாதிக்கப்படும்.
வருண பகவானே... வழி விட்டாய் !

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X