பொது செய்தி

இந்தியா

முப்படைக்கும் 30 சீகார்டியன் டிரோன்கள்

Updated : ஜூன் 16, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement

புதுடில்லி : அமெரிக்காவிடமிருந்து, 30 ஆயுதம் தாங்கிய சீ கார்டியன் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்த பணிகளை மேற்கொள்வதற்கான திட்டத்தை இந்திய பாதுகாப்புத்துறை இறுதி செய்திருக்கிறது.



latest tamil news





ரஷ்யாவிலிருந்து எஸ்-400

ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை மற்றும் மறைவிடங்களை, 400 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கி அழிக்க வல்ல எஸ்-400 ரக ஏவுகணைகளை, இந்தியா கொள்முதல் செய்கிறது. இதற்கு அமெரிக்கா கடுமையாக ஆட்சேபம் தெரிவித்த போதிலும், ரஷ்யாவிடமிருந்து, ஆற்றல்மிக்க எஸ்-400 ரக ஏவுகணை அமைப்பை பெறுவதில், இந்தியா உறுதியாக உள்ளது. இதனால் வேறுவழியின்றி, தங்கள் நாட்டு ஆயுதங்களை விற்பதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது.


30 டிரோன்கள் கொள்முதல் :


இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவிடமிருந்து, ஆளில்லா ஆயுதம் தாங்கிய 30 சீ கார்டியன் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இந்தியா, அதற்கான பணிகளை இறுதி செய்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், இந்தியா-அமெரிக்கா இடையிலான மிகப்பெரிய ஆயுத கொள்முதல் ஒப்பந்தங்களில் ஒன்றாக மாறும்.


latest tamil news





படைக்கு தலா 10


இந்த ஆயுதம் தாங்கிய சீ கார்டியன் டிரோன்களை முப்படையினரும் பயன்படுத்தலாம். இதையடுத்து, இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளுக்கும் தலா 10 டிரோன்கள் என, மொத்தம் 30 ஆயுதம் தாங்கிய சீ கார்டியன் டிரோன்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.


சீ கார்டியன் வலிமை :


ஆயுதம் தாங்கிய சீ கார்டியன் டிரோன்களின், நீளம் 11 புள்ளி 7 மீட்டர் ஆகும். இந்த டிரோன்களின் இறக்கை நீளம் 24 மீட்டர் ஆகும். சற்றே ஏறக்குறைய குட்டி விமானம் போலவே காட்சியளிக்கும் இந்த சீ கார்டியன் டிரோன், 2 ஆயிரத்து 155 கிலோ எடையுள்ள ஏவுகணை, குண்டுகளை சுமக்கும் வல்லமை கொண்டதாகும். இவற்றோடு சேர்த்து, 5 ஆயிரத்து 670 கிலோ எடையுடன், வானில் பறக்கும் திறன் படைத்தது.

அதிகப்பட்சமாக, 40 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டதாகும். தொடர்ந்து 35 மணி நேரம் பறக்கும் வல்லமை படைத்தது. கடற்பரப்பு கண்காணிப்பை எடுத்துக் கொண்டோமேயானால் , 5 ஆயிரத்து 500 நாட்டிக்கல் மைல்கள் தூரத்திற்கு, சீ கார்டியன் பறக்கும் திறன் கொண்டதாகும்.

பாதுகாப்புத்துறையின் கொள்முதல் கவுன்சில், சீ கார்டியன் டிரோன்களை வாங்க சம்மதம் தெரிவித்து கடிதம் கொடுத்தவுடன், அவற்றை வாங்குவதற்கு, அமெரிக்கா - இந்தியா இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணி - புதுகை,இந்தியா
17-ஜூன்-201906:17:40 IST Report Abuse
மணி இன்றய அதி நவீன ஆயுதங்களில் ஒன்றான சீ கார்டியன் எண்ணிக்கையை அதிகப்படுத்தவேண்டும், இதை மட்டும் மட்டும் வைத்து இருந்த இடத்தில் இருந்து எதிரிகளை தவிடுபொடியாக்கலாம். குருவிபோல் சிறுக சிறுக சேர்த்து கொண்டிருப்பது பலன் தராது.. படைக்கு நூறாக முன்னூறு வாங்கினாலும் போதாது, நமது எல்லையின் நீளம் மற்றும் எதிரிகளின் பலத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
17-ஜூன்-201903:55:47 IST Report Abuse
blocked user இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. முல்லாக்கள் தீவிரவாதிகளை அனுப்பிக்கொண்டுதான் இருப்பார்கள். நாமும் காந்தி தேசம் என்று இழப்புக்களை தாங்கிக்கொண்டு நம்மை பாதுகாத்துக்கொண்டு மட்டும் இருப்போம். பாகிஸ்தானின் பிரதான நகரங்களுக்கு ஒவ்வொரு அணுக்குண்டு போட்டால் இந்த தீவிரவாதத்துக்கு முடிவு கட்டமுடியும் - இல்லை என்றால் இஸ்லாமிய தீவிரவாதம் என்று வாழ்நாள் முழுவதும் சொல்லிக்கொண்டுதான் இருப்போம்.
Rate this:
Cancel
16-ஜூன்-201921:13:05 IST Report Abuse
ஆப்பு இதெல்லாம் ராணுவ ரகசியமோல்யோ....வெளீல சொல்லுவாளா...அபிஷ்ட்டு...அம்பீ அப்பிடியெல்லாம் இல்லை...வாங்குனதைச் சொல்லுவா...விலைதான் ராணுவ ரகசியம்...பாலிட்டிக்ஸ் இன்னும் புரியலியேடா நோக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X