பொது செய்தி

தமிழ்நாடு

மீன்பிடி தடைக்கால நிதி தலா 5 ஆயிரம்

Updated : ஜூன் 16, 2019 | Added : ஜூன் 16, 2019
Advertisement
மீன்பிடி தடைகாலம், ஜெயக்குமார்,

சென்னை ; கடந்த 2 மாத காலமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத காலகட்டமான மீன்பிடி தடைகாலத்தில், மீனவர் ஒருவருக்கு 5 ஆயிரம் வீதம், மொத்தம் 83.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

ஆண்டுதோறும், 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும். அந்தக் காலத்தில் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது. இதனால், வருமானமின்றி 13 கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றன.

எனவே, ஒரு குடும்பத்திற்கு தலா 5 ஆயிரம் வீதம், 1.67 லட்சம் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அரசு நிவாரணத்தொகையை மின்னணு பணப்பரிமாற்றத்தின் மூலம் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளது அரசு. கடந்தாண்டும் இதே எண்ணிக்கையில் மீனவக் குடும்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டது என்று கூறியுள்ளார் தமிழக மீன் வளத்துறை அமைச்சர், ஜெயக்குமார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X