இந்திய துவக்க ஜோடி சாதனை| Dinamalar

இந்திய துவக்க ஜோடி சாதனை

Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (6)

மான்செஸ்டர்: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி, உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக 100 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்த முதல் இந்திய துவக்க ஜோடி என்ற சாதனை படைத்தது.






மான்செஸ்டரில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. பாகிஸ்தான் பந்துவீச்சை எளிதாக சமாளித்த இந்தியாவின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது. இதன்மூலம் உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக 100 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்த முதல் இந்திய துவக்க ஜோடியானது.






இதற்கு முன், 1996ல் நடந்த உலக கோப்பை காலிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் சித்து, சச்சின் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 90 ரன் சேர்த்தது தான் அதிகபட்சம்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X