ராகுல் வெளிநாடு பயணம்: காங்கிரசார் அதிர்ச்சி| Dinamalar

ராகுல் வெளிநாடு பயணம்: காங்கிரசார் அதிர்ச்சி

Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (12)
ராகுல், வெளிநாடு, பயணம், காங்கிரசார், அதிர்ச்சி

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் வெளிநாடு சென்றுவிட்டதாகவும், அவர் எப்போது திரும்புவார் என யாருக்கும் தெரியாது என காங்கிரஸ் கட்சியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இத் தகவலை பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இணையதளம் கூறியுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.பி.,க்கள் பதவியேற்பு விழா ஜூன் 19 ம்தேதி வரை நடக்கிறது. அது வரை ராகுல் எங்கு சென்று உள்ளார். எப்போது நாடு திரும்புவார் என்பது உறுதிபடுத்தாத நிலையில் காங்கிரசார் கலக்கம் அடைந்துள்ளனர்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: காங்கிரஸ் தலைவராக ராகுல் தொடருவார் என்று உறுதியாக கூறினாலும் தனது ராஜினாமா குறித்து ராகுல் தீவிரமாக உள்ளார் என தெரிவித்தார்.
இந்நிலையில் ராகுல் வெளிநாடு சென்றுவிட்டார். இந்த தகவல் காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X