பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'ஆப்பு!'
50 இந்தியர்களுக்கு சுவிஸ் அரசு, 'நோட்டீஸ்'
கறுப்பு பணம் பதுக்கியோருக்கு இறுகியது பிடி

புதுடில்லி:கறுப்புப் பணம் அல்லது மோசடி செய்த பணத்தை முதலீடு செய்துள்ளதாக சந்தேகப்படும், 50 இந்தியர்களுக்கு, ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்து அரசு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. விளக்கம் திருப்தி தராதபட்சத்தில், இவர்கள் குறித்த விபரங்கள் நமது அரசுக்கு பகிர்ந்து கொள்ளப்படும்.

ஆப்பு,50 இந்தியர்,சுவிஸ் அரசு,நோட்டீஸ்,
கறுப்பு பணம்,பதுக்கியோருக்கு,இறுகியது பிடி


ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து, பனி நிறைந்த சுற்றுலா தலம்; வரி ஏய்ப்போருக்கான சொர்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த அவப் பெயரை நீக்கும் வகையில், வரி ஏய்ப்பு செய்வோர் மீது, சுவிட்சர்லாந்து அரசு, சில ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகிறது.


அதேபோல், கறுப்புப் பணம் பதுக்கல் என்பது, நமது நாட்டில், மிகப் பெரிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாக உள்ளது. இந்த கறுப்புப் பணம் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தங்கள் நாட்டில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டவர்கள் குறித்த விபரங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில், இந்தியாவுடன், சுவிட்சர்லாந்து அரசு கையெழுத்திட்டுள்ளது.


அதன்படி, தங்கள் நாட்டில் கறுப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளோரின் பட்டியலை, சுவிட்சர்லாந்து அரசு, நமது அரசுக்கு

அவ்வப்போது அளித்து வருகிறது. சுவிட்சர்லாந்தில், கறுப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளோர் என, சந்தேகப்படும் சிலர் குறித்த விபரங்களையும், நமது அரசு கேட்டுப் பெறுகிறது.


இந்த சூழ்நிலையில், கறுப்புப் பணம் பதுக்கி வைத்து உள்ளதாக சந்தேகப் படும், 50 இந்தியர்களுக்கு, அவர்களுடைய இறுதி தரப்பு வாதத்தை முன் வைக்கும் வாய்ப்பை, சுவிட்சர்லாந்து அரசு அளித்து உள்ளது. இதற்கான, அரசு அறிவிப்பாணை சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.அதாவது, இவர்கள் முதலீடுகள் குறித்த சந்தேகம் எழுந்து, அது குறித்து விளக்கம் கேட்கப்பட்டு, அதில், திருப்தி அடையாததால், இந்த இறுதி வாய்ப்பை அளிக்கப்பட்டு உள்ளது.


இதிலும் திருப்திகரமான பதில் கிடைக்காத நிலையில், இவர்கள் குறித்த விபரங்களை, நமது அரசுக்கு, சுவிட்சர்லாந்து அரசு அளிக்கும். அதனடிப் படையில்,நமது விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தும்.இவ்வாறு, கடந்த சில மாதங் களில் மட்டும், 100 பேர் பட்டியலை, சுவிட்சர்லாந்து அரசு அளித்துள்ளது. இதில், சிலருடைய முழு பெயர்கள் மற்றும் அவர்களுடைய தகவல்கள் கிடைத்துள்ளன.


அதே நேரத்தில், பெரும்பாலான கணக்குகளில், வெறும், 'இனிஷியல்'களால் கணக்கு வைத்து உள்ளோரின் விபரங்கள் கிடைத்துள்ளன. பெயர்கள் பட்டியல்சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டு உள்ளபட்டியலில், சிலரது முழுப்பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அவர்கள் விபரம்:

கிருஷ்ண பகவான் ராம்சந்த், புட்லுரி ராஜாமோகன் ராவ், கல்பேஷ் ஹர்ஷத் கினரிவாலா, குல்தீப் சிங் திங்ரா, பாஸ்கரன் நளினி, லலிதாபென் சிமன்பாய் படேல், சஞ்சய் டால்மியா, பங்கஜ் குமார் சரோகி,

Advertisement

அனில் பரத்வாஜ், தரணி ரேணு திகாம்தாஸ். மகேஷ் திகாம்தாஸ் தரணி, சவானி விஜய் கனியாலால், பாஸ்கரன் தரூர், கல்பேஷ்பாய் படேல் மகேந்திராபாய், அஜோய் குமார், தினேஷ் குமார் ஹிமத்சிங்கா, ரத்தன் சிங் சவுத்தரி, கதோடியா ராகேஷ் குமார்.


இவர்கள் தவிர, பலரது பெயர்கள் வெறும் இனிஷியல்களுடன், அடையாளப் படுத்தப் பட்டு உள்ளன. என்.எம்.ஏ., - எம்.எம்.ஏ., - பி.ஏ.எஸ்., - ஆர்.ஏ.எஸ்., - ஏ.பி.கே.ஐ., - ஏ.பி.எஸ்., - எம்.எல்.ஏ., - ஏ.டி.எஸ்., - ஆர்.பி.என்.,, - எம்.சி.எஸ்., - ஜே.என்.வி., - ஜே.டி., - ஏ.டி., - யு.ஜி., - ஒய்.ஏ., - டி.எம்., - எஸ்.எல்.எஸ்., - யு.எல்., - எஸ்.எஸ்., - ஆர்.என்., - வி.எல்., - யு.எல்., - ஓ.பி.எல்., - பி.எம்., - பி.கே.கே., - பி.எல்.எஸ்., எஸ்.கே.என்., - ஜே.கே.ஜே., என, இந்த பட்டியல் நீள்கிறது.


பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களும், அவர்களின் நிறுவனங்களும், மேற்கு வங்க மாநிலம், கோல்கத்தா, குஜராத், கர்நாடகா மாநிலம் பெங்களூரு, டில்லி, மஹாராஷ்டிர மாநிலம் மும்பை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhiyan - Chennai,இந்தியா
17-ஜூன்-201918:11:04 IST Report Abuse

Indhiyanஇந்த நடவடிக்கை எல்லாம் சும்மாங்காட்டிக்கு. தவறான பணம் என்று இதுவரை எத்தனை பேர் தண்டிக்கப்பட்டு உள்ளார்கள்?

Rate this:
விவசாயி - Tiruppur,இந்தியா
17-ஜூன்-201913:30:34 IST Report Abuse

விவசாயி கோபாலபுர சிங்கம் உயிரையே வெறுத்து ஊழல்கோட்டைக்குள் குடியேறிவிட்டது......

Rate this:
Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ
17-ஜூன்-201910:38:22 IST Report Abuse

Desabakthanசந்தோஷமான தகவல். தொடரட்டும் வேட்டை. இந்த இனிஷியல்களுடன் உள்ள கட்சிகளை பற்றி தெரிய வேண்டுமெனில் சற்றே நடிகர் விவேக் கட்சி பெயர்களை அடுக்கும் நகைச்சுவை காட்சியுடன் ஒப்பிடவும்.

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X