மஹாராஷ்டிராவில் 13 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

Added : ஜூன் 16, 2019
Advertisement
 மஹாராஷ்டிராவில் 13 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

மும்பை:மஹாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கத்தில், சமீபத்தில், பா.ஜ,வில் சேர்ந்த காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான, ஆர்.வி.பாட்டீல் உள்ளிட்ட, 13 பேர், புதிதாக பதவியேற்றனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.காங்., தலைவர்மாநில சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர், காங்., மூத்த தலைவர், ராதாகிருஷ்ண விக்கி பாட்டீல். இவரது மகன், சுஜய் விக்கி பாட்டீல், அகமது நகர் லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.மஹாராஷ்டிராவில், லோக்சபா தேர்தலில், காங்., - தேசியவாத காங்., கூட்டணி படுதோல்வியடைந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த, ஆர்.வி.பாட்டீல், காங்கிரசிலிருந்தும் விலகினார். கடந்த, 4ம் தேதி, பா.ஜ.,வில் இணைந்தார்.இதேபோல், தேசியவாத காங்., கட்சியில், மூத்த தலைவராக இருந்த, ஜெய்துத் கிஷிர்சாகர், அக்கட்சியிலிருந்து விலகி,சிவசேனாவில் சேர்ந்தார்.மஹாராஷ்டிரா சட்டசபைக்கு, அக்டோபரில் தேர்தல் நடக்க உள்ளது. சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர், இன்று துவங்குகிறது.இந்நிலையில், அமைச்சரவையை, முதல்வர் பட்ன விஸ் நேற்று மாற்றியமைத்தார். எட்டு பேர், கேபினட் அமைச்சர்களாகவும், ஐந்து பேர், இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். அவர்களுக்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.பா.ஜ.,வில், சமீபத்தில் சேர்ந்த, ஆர்.வி. பாட்டீல், மும்பை பா.ஜ., தலைவர், ஆசிஷ் ஷெலார், சுரேஷ் காவே, சஞ்சய் கியுடி, அனில் போண்டே, அசோக் உய்கி, சிவசேனாவில் சமீபத்தில் சேர்ந்த, கிஷிர்சாகர், தானாஜி சவந்த் ஆகியோர், கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.இந்திய குடியரசு கட்சியின் அதவாலே பிரிவை சேர்ந்த, அவினாஷ் மஹாடேகர் உட்பட ஐந்து பேர், இணை அமைச்சர்களாக பதவியேற்றனர்.
ராஜினாமா
மஹாராஷ்டிராவில், 2014ல், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் ஆட்சி அமைந்த பின், மூன்றாவது முறையாக, அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.முன்னதாக, மஹாராஷ்டிராவின் வீட்டு வசதித்துறை அமைச்சர், பிரகாஷ் மேத்தா உட்பட, ஐந்து அமைச்சர்கள், நேற்று ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவை, முதல்வர் பட்னவிஸ் ஏற்றுக் கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X