காஷ்மீரில் பாக்., மீண்டும் அத்துமீறி தாக்குதல்

Updated : ஜூன் 16, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (7)
Advertisement

புதுடில்லி:ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ஜம்மு - காஷ்மீரில் தாக்குதல் நடத்த, பயங்கர வாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, தேசிய புலனாய்வு அமைப்பிடம், பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் கூறியதாவது:லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது ஆகிய பயங்கரவாத அமைப்பினர், காஷ்மீரின் தெற்கு பகுதியில், குறிப்பாக, நெடுஞ்சாலைகளில், பாதுகாப்பு வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி உள்ளதாக, பாகிஸ்தான் அரசு தரப்பில், நமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.





அல் - குவைதா பயங்கர வாத அமைப்பைச் சேர்ந்த, மூசா, கொல்லப்பட்டதை அடுத்து, பழிவாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் முழுவதும், பாதுகாப்பை பலப்படுத்தும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
17-ஜூன்-201918:09:32 IST Report Abuse
DSM .S/o PLM ஒரு பக்கம் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி.. திட்டம் என்றெல்லாம் பாகிஸ்தான் இந்தியாவை எச்சரிக்கிறது.. மறுபக்கம் அவர்களது இராணுவமே அத்து மீறல்களை நடத்துகிறது...ஒருவேளை அவர்களது ராணுவத்தைத்தான் அவர்களே தீவிரவாதிகள் என்று சித்தரிக்கிறார்களோ ?
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-ஜூன்-201904:00:34 IST Report Abuse
J.V. Iyer கிரிக்கெட்டில் தோற்றுவிட்டார்கள் அல்லவா?? இதன் எதிரொலிதான். போட்டு தாக்கினால்தான் சரிப்பட்டு வருவார்கள். இவர்கள் மூட்டை பூச்சி, கரப்பான் போன்றவர்கள். ஒரேயடியாக ஒழிக்கப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
17-ஜூன்-201909:39:32 IST Report Abuse
Anandanசல்லிப்பயலுங்க இவனுங்க கோவம் எப்பவுமே இப்படித்தான்....
Rate this:
Share this comment
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
16-ஜூன்-201923:21:57 IST Report Abuse
ராஜேஷ் மக்கள் வரிப்பணத்தில் குடும்பம் நடத்தும் பல அரசு அதிகாரிகள் தினம் தினம் லஞ்சம் என்று கொள்வதை விட . இந்த தீவிரவாதிகள் குண்டுவெடிப்பில் சாவது ஒன்றும் பெரியவிஷயம் இல்லை .
Rate this:
Share this comment
blocked user - blocked,மயோட்
17-ஜூன்-201903:49:20 IST Report Abuse
blocked userபிச்சை போட ஆட்கள் இருக்கும் வரை பிச்சைக்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்....
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
17-ஜூன்-201909:54:27 IST Report Abuse
 Muruga Velகுண்டு வெடிப்பில் யாரும் விரும்பி சாவதில்லை… விபத்து மாதிரி … லஞ்சப் பேய்கள் சார்பதிவாளர் அலுவலகம் டாப் ...VAO எதுக்கெடுத்தாலும் லஞ்சம்...
Rate this:
Share this comment
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
17-ஜூன்-201918:11:43 IST Report Abuse
DSM .S/o PLM ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா என்ன சொல்ல வருகிறார் இவர் ? லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பதற்காக தீவிரவாதிகளை அனுமதிக்கலாமா ? அப்படியென்றால், திருடன் கொள்ளைக்காரன் என்று எல்லோரையும் அனுமதிக்கலாமே ? ஒருவேளை இவருக்கு அரசு வேலை கிடைத்திருந்தால் ....?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X