பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி மனைவிக்கு கு.க., புதுகை டீனிடம் புகார் கணவன் அனுமதியின்றி

Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுக்கோட்டை:மூன்று பெண் குழந்தைகளை பெற்ற மனைவிக்கு, அனுமதியின்றி, குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்து விட்டதாக, புதுக்கோட்டை மருத்துவக் கல்லுாரி டீனிடம், கணவர் புகார் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை, நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர், முருகன், 35. இவரது மனைவி கலைச்செல்வி, 30. இவர்களுக்கு, ஏற்கனவே, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. மீண்டும் கர்ப்பம் அடைந்த கலைச்செல்விக்கு,

புதுக்கோட்டை:மூன்று பெண் குழந்தைகளை பெற்ற மனைவிக்கு, அனுமதியின்றி, குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்து விட்டதாக, புதுக்கோட்டை மருத்துவக் கல்லுாரி டீனிடம், கணவர் புகார் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை, நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர், முருகன், 35. இவரது மனைவி கலைச்செல்வி, 30. இவர்களுக்கு, ஏற்கனவே, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. மீண்டும் கர்ப்பம் அடைந்த கலைச்செல்விக்கு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நேற்று முன்தினம், அறுவை சிகிச்சை மூலம், பெண் குழந்தை பிறந்தது.கலைச்செல்விக்கு குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்யலாமா என, டாக்டர்கள் கேட்டதற்கு, முருகன் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு, முருகன், தன் மனைவியை பார்க்க சென்றார். அப்போது, கலைச்செல்வி, தனக்கு டாக்டர்கள் குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த முருகன், டீன் மீனாட்சி சுந்தரத்திடம் புகார் அளித்துள்ளார்.
டீன் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது:நோயாளியின் அனுமதியோடு தான், குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்யப்பட்டு உள்ளது. அவரது கணவர் முருகன், டாக்டர்கள் மேல் குற்றம்சாட்டி உள்ளதால், உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். தவறு நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - CHENNAI,இந்தியா
17-ஜூன்-201915:34:04 IST Report Abuse
R S BALA மூன்றாவது குழந்தைக்கு பின் கட்டாய கு. க . சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி ஒரு பத்து வருட காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது ... (எனது சுற்றமும் நட்பும் அவ்வப்போது என் காதில் போட்ட அடிப்படையில் இதனை சொல்கிறேன் )
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
17-ஜூன்-201910:46:57 IST Report Abuse
Girija எதற்கு கணவனின் அனுமதி பெற வேண்டும்? குழந்தை பெற்று வளக்கும் வரை பொறுப்பு பெண்களின் மீதுதான் விழுகிறது, ஆண்கள் மனைவி போனாலும் இருந்தாலும் கூட இன்னொருத்தியை தேடி ஓடுகிறான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X