பொது செய்தி

தமிழ்நாடு

இணைந்த கரங்களால் நிறைந்த குளம்! தமிழகத்துக்கே வழிகாட்டும் ஆண்டிபாளையம்

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
திருப்பூர்:தன்னார்வலர்கள், பொதுமக்கள் கரம் கோர்த்ததால், ஆண்டிபாளையம் குளம், வற்றாத நீர்நிலையாக மாறியிருக்கிறது. இதன்மூலம்,அப்பகுதியில் நிலத்தடி நீர் வற்றாமல் பாதுகாக்கப்படுகிறது.திருப்பூர், குளத்துப்புதுாரில், 60 ஏக்கர் பரப்பில் ஆண்டிபாளையம் குளம் உள்ளது. மங்கலம் நல்லம்மன் மற்றும் ஒட்டணை தடுப்பணைகளில் இருந்து ராஜவாய்க்கால் மூலம், குளத்துக்கு தண்ணீர் வருகிறது.
 இணைந்த கரங்களால் நிறைந்த குளம்!  தமிழகத்துக்கே வழிகாட்டும் ஆண்டிபாளையம்

திருப்பூர்:தன்னார்வலர்கள், பொதுமக்கள் கரம் கோர்த்ததால், ஆண்டிபாளையம் குளம், வற்றாத நீர்நிலையாக மாறியிருக்கிறது. இதன்மூலம்,அப்பகுதியில் நிலத்தடி நீர் வற்றாமல் பாதுகாக்கப்
படுகிறது.

திருப்பூர், குளத்துப்புதுாரில், 60 ஏக்கர் பரப்பில் ஆண்டிபாளையம் குளம் உள்ளது. மங்கலம் நல்லம்மன் மற்றும் ஒட்டணை தடுப்பணைகளில் இருந்து ராஜவாய்க்கால் மூலம், குளத்துக்கு தண்ணீர் வருகிறது. குளம் நிரம்பிய பிறகு, உபரி நீர் மீண்டும் நொய்யலில் கலந்து விடும்.

கடந்த, 1984ம் ஆண்டு நொய்யல் வெள்ளப்பெருக்கில், தடுப்பணையில் இருந்து செல்லும் வாய்க்கால் சேதமடைந்தது. பின், குளத்துக்கு நீர் செல்லும் பாதையில், தடை ஏற்பட்டு குளம் வற்றியது. இருபது ஆண்டுகள் குளத்துக்கு நீர் சரிவர வரவில்லை.

குளத்தை மீட்க, 2005ல் 'வெற்றி' அமைப்பு களமிறங்கியது. இந்த அமைப்பு, ஊர் மக்கள் உள்ளிட்டோர் மும்முரமாக வேலை செய்தனர். அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, வாய்க்கால் சீரமைக்கப்பட்டு, தண்ணீர் வர இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதன் பயனாக, 2006ம் ஆண்டு குளம் நிரம்பியது.


புத்துயிர் பெற்ற குளம்

கடந்த, 2013ம் ஆண்டு, மாவட்ட நிர்வாகத்தின் முயற்சி, வெற்றி அமைப்பு உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள்,பொதுமக்கள் இணைந்து குளத்தை துார்வாரும் பணியை மேற்கொண்டனர். இதற்கு மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டு, களத்தில் இறங்கினர்.அவர்களுடன், 'தினமலர்'
இதழும் இணைந்து பணியை மேற்கொண்டது. குளத்தை சுற்றிலும்,2 ஆயிரத்து 450 மீட்டர் நீளத்துக்கு கரை மற்றும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது.

பல்லுயிர் பெருக்கத்துக்காக, நீர் தேங்கும் பரப்பில், இரண்டு திட்டுகள் அமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன. கரைகளை பலப்படுத்தும் வகையில், கருங்கற்கள் பதிக்கப்பட்டன. அடுத்தடுத்த ஆண்டுகளில் பெய்த மழையால், நீர் வரத்து அதிகரித்து குளம் நிரம்பியது.கடந்த 2014 முதல்,தற்போது வரை குளத்தில் நீர் இருந்து வருகிறது. ஆண்டுதோறும், பருவமழையில் குளம் நிரம்பி வருகிறது. பருவமழை ஆரம்பிக்கும் முன்னதாக, நீர் வரும் பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் அகற்றப்பட்டு வருகிறது.

குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதால், சுற்று வட்டார கிராமங்களில் விவசாய கிணறுகளில் மட்டம் குறையாமல் உள்ளது. வீடுகளில் உள்ள போர்வெல்களில் நீர்மட்டம் அதிகரித்து, தண்ணீர் பிரச்னை குறைந்துள்ளது.இணைந்த கரங்களால், குளம் நிறைந்தது. தன்னார்வலர்கள் முயற்சித்தால், அரசின் உதவியை எதிர்பார்க்காமல், நீர்நிலைகளை நிரப்பலாம் என்பதற்கு, ஆண்டிபாளையம் குளம் ஓர் உதாரணம்.


அனைவரும் பயன்

'வெற்றி' அமைப்பு தலைவர் சிவராமன் கூறுகையில்,''நொய்யல் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர், இரண்டு தடுப்பணைகள் மூலம் ராஜவாய்க்கால் வழியாக குளத்துக்கு சென்று, நிரம்பி யபின், மீண்டும் ஆற்றுக்கும் செல்லும் வகையில்இக்குளம் உள்ளது. நாங்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு குளம் புத்துயிர் பெற்றது. அதன் விளைவாக, குளம் ஒவ்வொரு ஆண்டும் நிரம்பி வழிந்து வருகிறது. கோடை காலத்தில், வற்றாமல் இருந்து வருகிறது. அனைவரும் பயனடைந்து வருகின்றனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GIRIPRABA - chennai,இந்தியா
18-ஜூன்-201911:56:22 IST Report Abuse
GIRIPRABA சென்னையில் உள்ள இளைஞர்கள் அனைவரும் இதுபோல் ஒன்று சேர்ந்து நல்ல விஷயங்களையும் குளங்களை தூர்வாரும் நிகழ்ச்சியையும் செய்தால் சென்னையும் பசுமை நிறைந்ததாகவும் தண்ணீர் பஞ்சம் தீர்ந்ததாக இருக்குமே ஒன்று திரள்வார்களா. ஜல்லிக்கட்டுக்கு கூடியதை போல் இதற்கும் அனைவரும் ஒன்று கூடினால்தான் தாகம், தண்ணீர் பிரச்சனை தீரும் மற்றவர்களை குறை கூறாமல் நாமே நம் பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.
Rate this:
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
17-ஜூன்-201911:16:17 IST Report Abuse
Abdul Rahman மிக அருமை. அனைத்து ஊர்களும் இதை பின்பற்ற வேண்டும்.
Rate this:
Cancel
Madurai Ravi - Tamilnadu,இந்தியா
17-ஜூன்-201908:00:04 IST Report Abuse
Madurai Ravi ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X