பொது செய்தி

தமிழ்நாடு

மரங்களில் அதிகரித்த தேன்கூடு சுற்றுலா பயணியர் வியப்பு

Added : ஜூன் 16, 2019
Share
Advertisement
கூடலுார்:முதுமலையில், மரங்களில் அதிகரித்துள்ள தேன்கூடுகள், சுற்றுலா பயணியரை, வியப்பில் ஆழ்த்தியுள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில், தேனீக்கள் சீசன் துவங்கியுள்ளது. வனங்களில் உள்ள பாறைகள், மரங்களில், தேன் கூடுகள் அதிகரித்துள்ளன. இவற்றில், பழங்குடி மக்கள், தேன் சேகரித்து, விற்பனை செய்கின்றனர்.தேனில் அதிக மருத்துவ குணம் உள்ளதால், மக்களிடம் வரவேற்பு உள்ளது.
 மரங்களில் அதிகரித்த தேன்கூடு சுற்றுலா பயணியர் வியப்பு

கூடலுார்:முதுமலையில், மரங்களில் அதிகரித்துள்ள தேன்கூடுகள், சுற்றுலா பயணியரை, வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில், தேனீக்கள் சீசன் துவங்கியுள்ளது. வனங்களில் உள்ள பாறைகள், மரங்களில், தேன் கூடுகள் அதிகரித்துள்ளன. இவற்றில், பழங்குடி மக்கள், தேன் சேகரித்து, விற்பனை செய்கின்றனர்.தேனில் அதிக மருத்துவ குணம் உள்ளதால், மக்களிடம் வரவேற்பு உள்ளது. அடர்ந்த வனப் பகுதிகளில் மட்டுமே இருக்கும் தேன்கூடுகள், தற்போது, முதுமலை புலிகள் காப்பகம், மைசூரூ தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சில மரங்களில், அதிகளவில் உள்ளன.ஒரே மரத்தில், பல இடங்களிலும் உள்ள தேன் கூடுகள், சுற்றுலா பயணியரை, வியப்பில் ஆழ்த்தியுள்ளது.விவசாயி ஆனந்தசயனம் கூறுகையில், ''தேனீக்கள் சீசனான, மே, ஜூன் மாதங்களில் எடுக்கப்படும் தேன், அதிக மருத்துவ குணம் வாய்ந்தது. பதப்படுத்தப்பட்ட தேனை, ஐந்து ஆண்டுகள் வரை வைத்து பயன்படுத்தலாம். இந்த சீசன் முடிந்து, இரண்டாவது சீசன், ஆகஸ்ட், செப்டம்பரில் துவங்கும்,'' என்றார்.வனத்துறையினர் கூறுகையில், 'தேன் கூடுகளுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்த கூடாது. மீறினால், தேனீக்கள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, அப்பகுதியை கவனமாக கடந்து செல்ல வேண்டும்' என, கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X