சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழகம்,முழுதும்,கட்டுமான,பணிகள்,நிறுத்தம்!

தமிழகம் முழுவதும், பல மாவட்டங்களில், தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், இருக்கும் தண்ணீர், மக்களின் தாகம் தீர்க்க உதவட்டும் என்ற நோக்கத்தில், கட்டுமான பணிகளை, தற்காலிகமாக நிறுத்த, கட்டுமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால், கட்டுமான பணிக்காக வரவழைக்கப்பட்ட வெளி மாநில தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு வெளியேறி உள்ளனர். வங்கிகளின் கடன் பெற்று, கட்டுமான நிறுவனங்களிடம் பணம் செலுத்தியோர், எப்போது வீடு கிடைக்கும் என, தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களிலும், எப்போதும் இல்லாத வகையில், கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சமையல் சார்ந்த பணிகளுக்கு கூட, தண்ணீர் கிடைப்பது சிக்கலாகி உள்ளது. இதனால், தனியார் உணவகங்கள், மதிய உணவு விற்பனையை நிறுத்தவும், வேலை நேரத்தை குறைக்கவும் திட்டமிட்டுள்ளன.தண்ணீர் தேவைப்படும் தொழில் நிறுவனங்களும், வேலை நேரத்தை குறைத்துக் கொள்ள முடிவு செய்து உள்ளன.
வீடுகளில் அத்தியாவசிய தேவைகளுக்கே, தண்ணீர் கிடைப்பது அரிதாகி உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் குடிநீர் வாரிய தண்ணீர் எப்போது கிடைக்கும் என, தெரியாததால்,

'எவ்வளவு விலை என்றாலும் பரவாயில்லை' என, தனியார் தண்ணீர் லாரிகளை தேடி, மக்கள் அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன், தாமதமாக துவங்கியுள்ள தென் மேற்கு பருவமழை கைகொடுக்குமா, அக்டோபரில் துவங்க உள்ள, வட கிழக்கு பருவ மழை வரை, இதே திண்டாட்டம் தொடருமா என்பது புரியாமல், மக்கள் தவிக்கின்றனர்.
இந்நிலையில், தண்ணீர் தேவை அதிகம் உள்ள கட்டுமான துறையும், தற்போது பாதிக்கப்பட்டு உள்ளது. மற்ற துறைகள், தொழில் நிறுவனங்கள் போன்று, கட்டுமானத் துறையினரும், தண்ணீர் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் தவிப்பை உணர்ந்த, கட்டுமான நிறுவனங்களும், இருக்கும் தண்ணீர், மக்களின் தாகத்தை தீர்க்க உதவட்டும் என்ற நோக்கில், பெரிய கட்டுமான திட்டங்களை, தற்காலிகமாக

நிறுத்தி வைக்க, திட்டமிட்டுள்ளன.
இது குறித்து, தமிழ்நாடு வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர், பி. மணிசங்கர் கூறியதாவது:திட்ட அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, பல புதிய கட்டுமான திட்டங்களுக்கான பணிகள், ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. கட்டுமான பணியில், அஸ்திவாரம், துாண்கள், தளம் அமைத்தல் ஆகியவற்றிற்கு, தண்ணீர் தேவை அதிகமாக உள்ளது.

மக்களின் குடிநீர் மற்றும் அன்றாட தேவைக்கே தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், கட்டுமான பணிகளுக்கு தண்ணீர் கிடைப்பது கடினம். எப்படியாவது தண்ணீர் கிடைத்தாலும், தற்போது, கட்டுமானத்திற்கு பயன்படுத்துவது சரியாக இருக்காது; அந்த

தண்ணீர், மக்களின் தாகம் தீர்க்கத் தான் பயன்பட வேண்டும்.
எனவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், புதிய திட்டங்களுக்கான கட்டுமான பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள நிலைமைக்கேற்ப, கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க, நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.தண்ணீர் பிரச்னை சீரடைந்த பின் தான், பணிகளை துவங்க முடியும்.

தவிர்க்க முடியாத நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புது வீடு வாங்க, பணம் செலுத்தி, முன்பதிவு செய்துள்ளோர், நிலைமையை உணர்ந்து, ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.கட்டுமான நிறுவனங்களின் முடிவால், வங்கியில் கடன் வாங்கி, பணம் செலுத்தியவர்கள், குறிப்பிட்ட கால கெடுவுக்குள், வீடு பெற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும், தண்ணீர் தட்டுப்பாட்டால், கட்டுமான பணிக்காக, தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்ட, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, வெளி மாநில தொழிலாளர்களை தங்க வைப்பதிலும், சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலைமை சீரடையும் வரை, வேலை இருக்காது என்பதால், சொந்த ஊர்களுக்கு அவர்கள் திரும்பி செல்கின்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
truth tofday - india,இந்தியா
17-ஜூன்-201919:37:56 IST Report Abuse

truth tofdayகர்நாடக முதல் அமைச்சரை நேரில் தொடர்பு கொண்டு நமது தலைவர்கள் பேசினால் சில tmc தண்ணீர் கிடைக்கும் அதைக்கொண்டு கொஞ்சநாள் சமாளிக்கலாம்

Rate this:
aandi - chennai,இந்தியா
17-ஜூன்-201917:22:34 IST Report Abuse

aandiகவலைப்படாதீர்கள் கைஸ், நாம ஒட்டு போட்ட நம் சுடலை ரட்சிப்பார்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஜூன்-201916:20:58 IST Report Abuse

Pugazh Vகலைஞர் கட்டிய அணைகள் எத்தனை என்று கூகிளில் பார்க்க. நன்றி

Rate this:
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
17-ஜூன்-201916:36:47 IST Report Abuse

Gokul Krishnanகலைஞர் மண்ணை போட்டு மூடிய ஏரிகள் குளங்கள் எதனை என்று கூகுளை பார்க்காமலே சொல்லலாம் ...

Rate this:
aandi - chennai,இந்தியா
17-ஜூன்-201917:25:23 IST Report Abuse

aandiகலைஞர் கட்டியணைச்சது எங்களுக்கு தெரிஞ்சு மூணு. ...

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X