பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'கோர்ட்தாங்க மனசு வைக்கணும்!':
'எஸ்கேப்' ஆகும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்

சென்னை மக்களின் தாகம் தீர்க்கும், பூண்டி நீர்தேக்கத்தை, துார் வாரி சீரமைக்கும் பணி, பல ஆண்டுகளாக முடக்கியுள்ளது. நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், கிடப்பில் போட்டுள்ளனர்.

''பூண்டி நீர்தேக்கத்தை துார் வாரி மேம்படுத்தும் பணிக்கு ஒப்பந்ததாரர் தேர்வு தொடர்பான வழக்கு,சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளது. சட்டச் சிக்கலை தீர்க்க, அரசு வழக்கறிஞர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒப்பந்ததாரர் தேர்வு உள்ளிட்டவை, முறையாக நடந்தது குறித்து, உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படஉள்ளது.'

'சாதகமான தீர்ப்பு கிடைத்ததும், துார் வாரும் பணிகள் துவங்கும். அந்த தீர்ப்பு எப்போது கிடைக்கும் என்பதை சொல்ல முடியாது. நீர்தேக்க புனரமைப்பிற்கு, நீதிமன்றம்தான் மனது வைக்க வேண்டும்,'' என்கிறார், பாலாறு கோட்ட கண்காணிப்பு பொறியாளர், கணேசன்.''பூண்டி நீர்த்தேக்க கரையை, 10 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணி, நடந்து வருகிறது.

மற்ற பணிகள் குறித்து, என்னால் கூற முடியாது. நான் பேட்டியும் கொடுக்கக்கூடாது,'' என, அலறுகிறார், ஏரி பராமரிப்பை தன் கட்டுப் பாட்டில் வைத்துள்ள, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், கவுரி சங்கர். 'பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கு; நாங்க என்ன செய்ய முடியும்' என்று கூறி, பொறுப்பை உணராமல், ஆண்டுக்கணக்கில் பிரச்னையை இழுத்தடிக்கலாம் என்பது தான், அதிகாரிகளின் எண்ணமாக உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீராதாரங்களில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, பூண்டி நீர் தேக்கம் முக்கியமானது. ஆந்திராவில் இருந்து வரும், கொசஸ்தலையாற்றின் குறுக்கே, 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 1944ல், இந்த நீர்தேக்கம் கட்டப்பட்டது.

சென்னையின் தாகம் தணிப்பதற்காக, இந்த

ஏரியின் நீர்தேக்க பகுதிகளில் வசித்த, 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளி யேற்றப்பட்டு உள்ளனர்.வட கிழக்கு பருவமழை காலங்களில், இந்த ஏரிக்கு, தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி, ஆந்திராவில் இருந்தும், நீர்வரத்து கிடைத்து வருகிறது.தெலுங்கு கங்கை திட்டப்படி, ஆண்டுதோறும், 12 டி.எம்.சி., நீரைவழங்கவும், ஆந்திரா - தமிழகம் அரசுகளிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. ஆந்திராவின் கண்டலேறு அணையில் திறக்கப் படும் நீர், சாய்கங்கை கால்வாய் வழியாக, பூண்டி நீர்தேக்கத்தை வந்தடைகிறது. இங்கு, சுத்திகரிப்பு நிலையம் இல்லை. எனவே, பேபி கால்வாய் வழியாக, புழல் ஏரிக்கும், 'லிங்க்' கால்வாய் வழியாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கும், நீர் எடுத்து செல்லப்படுகிறது.

ரூ.200 கோடி எங்கே?

பூண்டி நீர்தேக்கத்தில், 3.23 டி.எம்.சி., நீரை சேமித்து வைக்க முடியும். இந்த நீரை, சென்னை நகரின், நான்கு மாத குடிநீர் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும். பூண்டி நீர்தேக்க பராமரிப்புக்காக, உலக வங்கியின் அணைகள் புனரமைப்பு திட்டம், 'நபார்டு' வங்கியின் மதகுகள் புதுப்பிப்பு திட்டம், மாநில அரசின் பராமரிப்பு நிதி, வெள்ள மேலாண்மை நிதி ஆகியவற்றின் வாயிலாக, இதுவரை, 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப் பட்டுள்ளது. பணம் தான் செலவானதே தவிர, நீர்தேக்கம் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால், நீர்தேக்கத்தின் கொள்ளளவு, 30 சதவீதம் குறைந்துள்ளது.


அணைகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் நடத்திய ஆய்வில், இத்தகவல் அம்பலமாகி உள்ளது. சென்னையின் தேவை கருதி, நீர் தேக்கத்தை புனரமைத்து, மீண்டும் முழு கொள்ளளவு நீரை சேமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, 2016ல் பொதுப்பணித்துறையினர் புதிய திட்டம் வகுத்தனர்.

அதன்படி, நீர்தேக்கத்தை துார்வாரும் பணியை, தனியார்நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவானது.தொடர்ச்சியாக, ஆறு ஆண்டுகள்

Advertisement

துார்வாரும் திட்டத்தை செயல்படுத்தி, மண் அள்ளுவதன் வாயிலாக, அரசுக்கு, 250 கோடி ரூபாய் வருவாய் பெறும் வகையில், திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள், உரிய கவனம் செலுத்தாதால், திட்டம் செயல் பாட்டிற்கு வரவில்லை. நீண்ட இழுபறிக்குப் பின், நடப்பாண்டின் துவக்கத்தில் தான், நிதித்துறை ஒப்புதல் கிடைத்துள்ளது.


வழக்கால் சிக்கல்?

வட கிழக்கு பருவ மழை துவங்கும், அக்டோபருக்கு முன், துார் வாரும் பணிகளை முடக்கும் வகையில், ஒப்பந்ததாரர் தேர்வு நடந்தது. ஒப்பந்ததாரர் தேர்வில் விதி மீறல் நடந்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி, சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே, ஒப்பந்ததாரர் தேர்வு செய்து, நீர்நிலைகளில் துார்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


ஆனால், குடிநீர் தேவைக்கான நீர்நிலைகளை புனரமைக்க, சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவை இல்லை என்பதை, பசுமை தீர்ப்பாயம் தெளிவுபடுத்தி உள்ளது.இந்த வாதத்தை, உயர்நீதிமன்றத்தில் எடுத்துரைக்க, அரசு வழக்கறிஞர்கள் தவறியதே, பூண்டி நீர்தேக்க புனரமைப்பு பணிகள் முடங்கியதற்கு காரணம்.
எதிர்பார்ப்பு


இது தொடர்பான வழக்கில், மேல் முறையீடு செய்யாமல், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், அரசு வழக்கறிஞர்களும், ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர்.


இதனால், நடப்பாண்டில், பூண்டி நீர்தேக்கத்தை துார்வாரும் பணிகளை துவங்குவதில், சிக்கல் நீடித்து வருகிறது. வழக்கில், நீதிமன்றத்தை அணுகி, சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு கண்டு, ஏரியை துார் வாரும் பணியை துவக்க, பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள, முதல்வர், இ.பி.எஸ்.,உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
17-ஜூன்-201916:39:21 IST Report Abuse

Subramanian Sundararamanஎந்த எந்த வழக்கையோ அவசரமாக எடுத்து விஜாரிக்கும் கோர்ட் மக்கள் தவிக்கும்போது பொதுப்பணித்துறைக்கு எதிராக உள்ள வழக்கை உடனடியாக எடுத்து தீர்வு காணலாமே . அப்படி இல்லையென்றால் நீதி மன்றத்தின் மேற்பார்வையாளர் முன் நிலையில் ஒப்பந்ததாரரை தேர்வு செய்யலாம் . வேலை ஒப்பந்த புள்ளி படி நிறைவேற்றப்பட்டுள்ளதை மூன்றாவது நிறுவனம் (பொதுப் பணி துறை ஒப்பந்ததாரர் அல்லாத ) technical audit செய்து சான்றிதழ் தரவேண்டும் . வழக்கு மேலும் தாமதமானால் நீதிபதிகள் வீட்டுக்கே தண்ணீர் தரமுடியாமல் போய்விடும் . தீர்ப்புக்குள் மழை வந்துவிட்டால் தூர் வார முடியாமல் போய் வரும் ஆண்டுகளிலும் தண்ணீர் பஞ்சம் தொடரும் . கோர்ட்டுகளை கேள்விகேட்கும் உரிமையை அரசியல் சட்ட திருத்தம் மூலம் கொண்டுவரவேண்டும் . பொதுநலம் பாதிக்கும்போது ஒப்பந்தக்காரர்கள் தங்களுக்குள் உள்ள போட்டியால் கோர்ட்டில் கேஸை இழுக்கடித்து தாமதப் படுத்துவதை கோர்ட்டுகள் தடுத்து விரைந்து ஒரு தீர்ப்பு வழங்கவேண்டும் .

Rate this:
krish - chennai,இந்தியா
17-ஜூன்-201913:55:16 IST Report Abuse

krishநீதிமன்றம் தண்ணீர் பஞ்சம் தீர்க்கும் வகையில், தன் கண்காணிப்பில் , புது டெண்டர் விட்டு, துரிதமாக தூர் வரும் பணியை மேற்கொள்ள நீதி வழங்கவேண்டும். சென்னை மக்கள், நீதிமன்றத்திற்கு நெஞ்சார, வாயார, தாகம் தீர்ந்து நன்றி கூறுவர். டெண்டரில் அமைச்சர்கள் உறவினர் பங்கீடு கூடாது என்ற தடை உத்திரவு போட்டு, நீதிமன்றம் டெண்டர் ஏலம் விடவேண்டும். தானாகவே முன்வந்து, தூர் வரும் பொறியாளர் குழு அமைத்திடல் வேண்டும். நீதிமன்றம் கட்டாயம் செவி சாய்க்கும் என்று நம்பலாம்.

Rate this:
Siva -  ( Posted via: Dinamalar Android App )
17-ஜூன்-201911:11:25 IST Report Abuse

Siva Court have voluntarily asked for status of water scarcity mitigation, why cant the court give order to clear this case on swift basis. Even judges also need water

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X