அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழக உரிமைகளை டில்லியில்
அடகு வைத்துள்ளார் பழனிசாமி?

சென்னை:'தமிழக உரிமைகளை, முதல்வர், இ.பி.எஸ்., டில்லியில் அடகு வைத்து விட்டார்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக, உரிமைகளை , டில்லியில் , அடகு ,வைத்துள்ளார், பழனிசாமி?


அவரது அறிக்கை:தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் கிடைக்காமல், தமிழகமெங்கும் மக்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர். இந் நேரத்தில், டில்லி சென்ற முதல்வர், இ.பி.எஸ்., தமிழக மக்களுக்கு எந்த விதமான ஆக்கப்

பூர்வமான திட்டங்களையும் கேட்டுப் பெறாமல், தன் கட்சியின் சொந்த பஞ்சாயத்தை மட்டும் பேசி திரும்பியுள்ளார்.பிரதமர் மோடியிடம், முதல்வர் கொடுத்த, 29 கோரிக்கைகள், புதிய மொந்தையில் பழைய கள் அடைக்கப்பட்டு உள்ளதை தான் நினைவூட்டுகிறது.


உள்ளாட்சி நிதி, ஜி.எஸ்.டி.,யால் ஏற்பட்ட இழப்பீடுத் தொகை என, 17 ஆயிரத்து, 350 கோடி ரூபாய் நிதியை, தமிழகத்திற்கு வழங்காமல், மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. இந்த செயலை, 'நிடி ஆயோக்' கூட்டத்தில், அனைத்து மாநில முதல்வர்கள் மத்தியில்,சுட்டிக்காட்டும் வாய்ப்பை, முதல்வர் தவற விட்டு விட்டார்.


மேகதாது அணை கட்டுவது குறித்து, கர்நாடக முதல்வர் பேசியதை, நிடி ஆயோக் கூட்டத்தில்,

Advertisement

முதல்வர், இ.பி.எஸ்., கண்டித்து பேசவில்லை. இப்படி, தமிழக உரிமைகளை, டில்லியில் அடகு வைத்து, 'என் பதவியை மட்டும் எப்படியாவது காப்பாற்றுங்கள்' என, கெஞ்சி, மடிப்பிச்சை ஏந்தி, மன்றாடி விட்டு திரும்பி உள்ள முதல்வர், இ.பி.எஸ்.,சை, தமிழக மக்கள் மன்னிக்க மாட்டர்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
18-ஜூன்-201905:06:04 IST Report Abuse

 nicolethomsonசபா ரீஷு என்னய்யா பண்ணிட்டு இருக்க , இந்தி பேசும் பிரஷாத் கிஷோருக்கு இந்தியில் சொன்னியா இல்லை வழக்கம் போல தமிழில் சொன்னயா ?இப்போ முதல்வர் எடப்பாடி அவர்கள் பேசியிருக்காரு , எனக்கு பீதியாயிடுச்சே என்று சொல்லாம சொல்றாரு

Rate this:
Nathan - Manama,பஹ்ரைன்
17-ஜூன்-201920:58:44 IST Report Abuse

Nathanநீங்கள் 27 MP க்கள்தான், பார்லிமென்டில் கலக்கப்போகி றீர்களே

Rate this:
oce - chennai,இந்தியா
17-ஜூன்-201919:41:26 IST Report Abuse

oceநல்ல வாயன் கஷ்டப்பட் நாறவாயன் கோணவாயன் அனுபவித்தான்.

Rate this:
மேலும் 53 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X