பதிவு செய்த நாள் :
லோக்சபா, சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்:
அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தல்

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசு, இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின், பார்லிமென்ட் முதல் கூட்டத் தொடர், இன்று துவங்கவுள்ளது. இதை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக, நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
இதில் பேசிய பிரதமர் மோடி, ''லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை, ஒரே நேரத்தில் நடத்துவதற்கு, அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என, வலியுறுத்தினார்.

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, 353 தொகுதிகளில் வென்று, மீண்டும் ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக, பிரதமராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவையும் பதவியேற்றது.


சட்ட மசோதாக்கள்

இந்நிலையில், 17வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர், இன்று துவங்கி, அடுத்த மாதம், 26 வரை நடக்கிறது. அடுத்த மாதம், 5ல், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து, கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தவும், நிலுவையில் உள்ள, 'முத்தலாக்' உள்ளிட்ட முக்கிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றவும், மத்திய அரசு சார்பில், நேற்று, அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

டில்லியில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள், முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில், பிரதமர் மோடி பேசியதாவது:

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பல புது முகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, பார்லிமென்ட் கூட்டத் தொடர், புத்துணர்ச்சி யுடனும், புதிய சிந்தனைகளுடனும் துவங்கும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. கடந்த

முறை, தேவையில்லாத கூச்சல், குழப்பம், அமளிகளால், பார்லிமென்ட் கூட்டத் தொடர், கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்களின் வரிப் பணம் வீணானது.இந்த முறை, அதுபோன்ற பிரச்னைகள் இல்லாமல், கூட்டத் தொடரை, சுமுகமாக நடத்தி முடிக்க, அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்.எம்.பி.,க்கள் அனைவரும், அரசியல் வேறுபாடுகளை மறந்து, நாட்டுக்காக பணியாற்ற வேண்டும். தேர்தலின்போது, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, கடுமையாக உழைக்க வேண்டும்.

தற்போது, நம் நாட்டில், லோக்சபா தேர்தலும், சட்டசபை தேர்தல்களும், தனித் தனியாக நடத்தப்படுகின்றன. வெவ்வேறு கால கட்டங்களில் தொடர்ந்து தேர்தல்கள் நடப்பதால், கால விரயம் ஏற்படுவதுடன், செலவும் அதிகமாகிறது.இதை தவிர்க்க, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற நடைமுறைக்கு, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதன்படி, லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தி முடிக்க முடியும்.


கலந்துரையாடல்

இது தொடர்பாக, அனைத்து கட்சி கூட்டம், வரும், 19ல் நடத்தப்படும். இதில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து, அனைத்து கட்சி பிரதிநிதிகள், தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். மேலும், வரும், 2022ல், நம் நாட்டின், 75வது சுதந்திர தின விழாவை, கோலாகலமாக கொண்டாடுவது குறித்தும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். இதற்கு அடுத்த நாள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா, எம்.பி.,க்கள் அனைவரும், சுதந்திரமாக, தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் வகையில், கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.


அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற, காங்கிரஸ் மூத்த தலைவர், குலாம்நபி ஆசாத் கூறியதாவது: மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களை நிறைவேற்று வதற்கு, காங்கிரஸ் முழு ஒத்துழைப்பு அளிக்கும். அதே நேரத்தில், நாட்டில் நிலவும் வறட்சி, வேலை வாய்ப்பின்மை ஆகியவற்றுக்கு, இந்த கூட்டத் தொடரில் முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்க வேண்டும் என, வலியுறுத்தினோம்.மேலும், ஜம்மு - காஷ்மீரில், விரைவாக, சட்டசபை தேர்தலை நடத்தும்படி வலியுறுத்தினோம். இவ்வாறு, அவர் கூறினார்.

திரிணமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்,

Advertisement

டெரக் ஒ பிரெயின் கூறுகையில், ''சட்டசபை மற்றும் பார்லிமென்டில், பெண்களுக்கு ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா, நீண்ட கால மாக நிலுவையில் உள்ளது. ''வரும், கூட்டத் தொடரில், இந்த மசோதாவை நிறைவேற்றும் படி வலியுறுத்தினோம்,'' என்றார்.இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில், தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டமும் நடந்தது.


முத்தலாக் தடை சட்ட மசோதா, மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, பெண்களுக்கு ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, குடியுரிமை சட்ட சீர்திருத்த மசோதா உள்ளிட்டவை, நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் நிலுவை யில் உள்ளன.இது தவிர, முக்கியத்துவம் வாய்ந்த, ஆதார் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட, பல புதிய மசோதாக்களும், இந்த கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவற்றை, இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற, மத்திய அரசு, தீவிரம் காட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் யார்?


கடந்த, 2014ல், நடந்த லோக்சபா தேர்தலில், மிக குறைந்த தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால், லோக்சபாவில், பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து, அந்த கட்சிக்கு கிடைக்கவில்லை. லோக்சபா, காங்., தலைவராக, கர்நாடகாவைச் சேர்ந்த, மல்லிகார்ஜுன கார்கே, தேர்வு செய்யப்பட்டார்.


இந்த தேர்தலிலும், காங்கிரசால், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியவில்லை. இந்த தேர்தலில், மல்லிகார்ஜுன கார்கே தோல்வி அடைந்தார். இதையடுத்து, புதிய லோக்சபாவின் காங்கிரஸ் தலைவராக, யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த பதவியை ஏற்க, காங்., தலைவர் ராகுலுக்கு விருப்பமில்லை. மணீஷ் திவாரி, சசி தரூர், கேரள, எம்.பி.,யான, கே.சுரேஷ் ஆகியோரில், யாராவது ஒருவர், காங்., லோக்சபா தலைவராக தேர்வு செய்யப்படுவர் என, தெரிகிறது.சசி தரூர், சுரேஷ் ஆகியோருக்கு, ஹிந்தியில் சரளமாக பேச தெரியாது என்பதால், திவாரிக்கே, அதிக வாய்ப்பிருப்பதாக, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-ஜூன்-201917:03:10 IST Report Abuse

Malick Rajaஎதை செய்யவேண்டுமோ அதை செய்வதில்லை .. கட்சிகளுக்கு நிதி எங்கிருந்து வருகிறது .. ஏன் வருகிறது அதை பயன்கள் இதை ஆராய்ந்தால் மட்டுமே போதும் பொருளாதாரம் தானாக மேலோங்கும் .. கட்சிக்கு நிதி 1000.கோடிரூபாய்வந்தால் ஒருலட்சம் கோடிரூபாய்கள் அரசாங்க கஜானாவிலேர்ந்து போய்விடும் . இந்தநிலை 1948.முதல் இருக்கிறது .. அதன் ஒருகாரணமாகவே அன்றிருந்த ரூபாயின் மதிப்பு இன்று அதலபாதாளத்தில் சென்றுள்ளது ( அன்று ஒரு ரூபாய்க்கு 6.டாலராக இருந்தது இன்று ஒரு டாலர் 70.ரூ க்கு வந்துள்ளது ) எந்த அரசியல் கட்சியும் யோக்கியமாக இருக்கவே இல்லை என்பது தெளிவு .. தெர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களோடுதான் பயணிக்கவேண்டும் உயர் பாதுகாப்பு என்பதை நீக்கவேண்டும் ..இதை செய்தாலே போதும் ஜமீன்தார்கள் தானாக அரசியலிருந்து வெளியேறுவார்கள் .. ஏதாவது ஒருகட்சி இதை ஏற்க்குமா என்றால் ஏற்காது என்பதே விடையாக வரும் ..ஆக மக்களிடம் வரிகள் ..அரசங்கவேலைகள் அனைத்திலும் ஊழல்கள் என்று பலவகையிலும் நாட்டில் பொருளாதாரம் சீரழிந்துவிட்டது என்பது மட்டும் நிரந்தரமாக இருக்கவேண்டிய நிலையில் இருப்பது அனுதாபத்திற்கு உரியது

Rate this:
muthu Rajendran - chennai,இந்தியா
17-ஜூன்-201916:29:37 IST Report Abuse

muthu Rajendranசுயேட்சைகளை தேர்தலில் நிற்க அனுமதிக்க கூடாது. குறைந்தது மாநிலத்தின் மொத்த சட்டமன்ற தொகுதிகளின் பத்து சதவீத இடங்களை கூட தனியாக நின்று பிடிக்க முடியாத கட்சிகளை அனுமதிக்க கூடாது.வேண்டுமானால் ஏதாவது கூட்டணியில் சேர்ந்து நிற்கட்டும் மத சாதி அமைப்புகளின் அடிப்படையில் உள்ள கட்சிகளை பதிவு செய்யக்கூடாது.தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ஆளுங்கட்சி நிருவாக்கத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். அப்போது தான் நியாயமான தேர்தல் நடைபெற உதவியாக இருக்கும் பணம் கொடுப்பவர்களை வாங்குபவர்களை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும்.மொத்தத்தில் பல கட்சி அரசியல் வேண்டாம் அதிக பட்சம் மூன்று கட்சிகள் இருக்குமாதிரி அமைப்பு வேண்டும்.எம் பி , எம் எல் ஏ க்களுக்கு அமர்வு படி போக்குவரத்து படி போதும் சம்பளம் பென்ஷன் எல்லாம் கொடுக்க கூடாது. மக்கள் சேவை செய்பவர்கள் வந்தால் போதுமானது.லஞ்ச லாவண்ய வழக்குகள் உள்ளவர்கள் தண்டனை பெற்றவர்களை தேர்தலில் நிற்க தடை செய்ய வேண்டும்.

Rate this:
siriyaar - avinashi,இந்தியா
17-ஜூன்-201915:42:17 IST Report Abuse

siriyaarit is again an anti tamilan policy we loose 2000 rupees they pay only one time

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X