அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதுகுளத்துார் அரசுப்பள்ளி வளாகத்தில் சிமென்ட் தளம்

Added : ஜூன் 16, 2019
Advertisement

முதுகுளத்துார் : ''முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தாழ்வான பகுதியில் எம்.எல்.ஏ, நிதியில் சிமென்ட் தளம் அமைக்கப்படும்,'' என பாண்டியன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள ஏனாதி, காத்தாகுளம், துாரி, சித்திரங்குடி, கொண்டுலாவி,பொசுக்குடி, இளஞ்செம்பூர்,பூக்குளம் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 600க்கும் அதிகமான மாணவர்கள் முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலுகின்றனர்.பள்ளி வளாகத்தில் தாழ்வாக இருப்பதால் அவ்வப்போது பெய்யும் மழையினால் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

மாணவர்கள் அவதிப்பட்டுவந்தனர்.இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன்எதிரொலியாக முதுகுளத்துார் எம்.எல்.ஏ, பாண்டியன் சொந்த செலவில் கிராவல், மணல் கொட்டி சமன்செய்தனர்.பள்ளி தலைமையாசிரியர் உமாமகேஸ்வரி,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மலைச்சாமி மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு சிமெண்ட் தளம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.நேற்று முதுகுளத்துார் எம்.எல்.ஏ., பாண்டியன் அரசு பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.தொழிற்கல்வி ஆசிரியர் மங்களநாதன் வரவேற்றார்.

இதுகுறித்து எம்.எல்.ஏ., பாண்டியன் கூறுகையில், '' மாணவர்களின் நலன்கருதி முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தாழ்வாக உள்ள பகுதியில் எம்.எல்.ஏ, நிதியில் சிமென்ட் தளம் அமைக்கப்படும்,'' என்றார்.உடன் முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் லெட்சுமணன்,ஒய்வு பெற்ற ஆசிரியர் துரைபாண்டியன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X