ரோகித் அதிரடி: பாக்.,கை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (17)
Advertisement

மான்செஸ்டர்: பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ரோகித் சதம் விளாச இந்திய அணி 'டக்வொர்த் லீவிஸ்' விதிமுறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மான்செஸ்டர் நகரில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய அணியில் காயத்தால் விலகிய ஷிகர் தவானுக்கு பதிலாக தமிழக 'ஆல்-ரவுண்டர்' விஜய் சங்கர் தேர்வானார். பாகிஸ்தான் அணியில் இமாத் வாசிம், ஷதாப் கான் இடம் பிடித்தனர். 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


அசத்தல் துவக்கம்:

ஷிகர் தவானுக்கு பதிலாக லோகேஷ் ராகுல் துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்கினார். இருவரும் சிறப்பான அடித்தளம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்தபோது, அரை சதம் அடித்த ராகுல் (57) வெளியேறினார். எதிரணி பந்துவீச்சை சிதறடித்த ரோகித் (140) சதம் விளாசினார். ஆமிர் 'வேகத்தில்' பாண்ட்யா (26) சிக்கினார். தோனி ஒரு ரன்னில் திரும்பினார்.

சிறப்பாக செயல்பட்ட கோஹ்லி அரை சதம் எட்டினார். மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது. மீண்டும் துவங்கிய போட்டியில், ஆமிர் பந்தில் சர்ச்சைக்குரிய முறையில் கோஹ்லி (77) ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 336 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் (15), ஜாதவ் (9) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆமிர் 3 விக்கெட் வீழ்த்தினார்.


விஜய் சங்கர் அபாரம்:

கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு இமாம், பகார் ஜமான் ஜோடி துவக்கம் தந்தது. தமிழகத்தின் விஜய் சங்கர் 'வேகத்தில்' இமாம் (7) ஆட்டமிழந்தார். குல்தீப் 'சுழலில்' பாபர் ஆசாம் (48) அவுட்டானார். ஜமான் (62) அரை சதம் கடந்தார். பாண்ட்யா பந்துவீச்சில் ஹபீஸ் (9), மாலிக் (0) சிக்கினர். விஜய் சங்கர் பந்தில் கேப்டன் சர்பராஸ் (12) திரும்பினார். அணி 35 ஓவரில் 166 எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

40 நிமிடத்திற்குபின் மீண்டும் துவங்கிய போட்டி 40 ஓவராக குறைக்கப்பட்டது. 'டக்வொர்த் லீவிஸ்' விதிமுறைப்படி பாகிஸ்தான் இலக்கு 302 ரன்களாக மாற்றப்பட்டது. பாகிஸ்தான் அணி 40 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 212 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. இமாத் வாசிம் (46), ஷாதப் கான் (20) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர், பாண்ட்யா, குல்தீப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.


தொடரும் ஆதிக்கம்:

இப்போட்டியில் வென்றதன் மூலம், உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கிறது. இதுவரை விளையாடிய 7 போட்டியிலும் (1992ல் லீக், 1996ல் காலிறுதி, 1999ல் 'சூப்பர்-6', 2003ல் லீக், 2011ல் அரையிறுதி, 2015ல் லீக், 2019ல் லீக்) இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தியது.

* தவிர, 'டுவென்டி-20' உலக கோப்பையிலும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றதில்லை. இதுவரை விளையாடிய 5 போட்டியிலும் இந்திய அணி வென்றது. இதன்மூலம் ஒட்டுமொத்த உலக கோப்பை அரங்கில் (50 ஓவர், 'டுவென்டி-20'), பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 100 சதவீத (12 போட்டி, 12 வெற்றி) வெற்றி கண்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
17-ஜூன்-201913:51:19 IST Report Abuse
M.COM.N.K.K. ரோகித் ஷர்மாவுக்கு ஆட்டம் பிடித்துவிட்டால் போதும் எந்த அணியும் இந்தியாவை வெல்லவேமுடியாது.
Rate this:
Share this comment
Cancel
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜூன்-201909:25:22 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan won the war , congrats and thanks to our indian cricket military..
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜூன்-201909:06:55 IST Report Abuse
Janarthanan நேற்று பக்கிகளுக்கு வாழ்த்து தெரிவித்த நம்மு ஊரு இம்ரான் ரசிகர் மன்ற தலைவர் எங்கயோ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X