பதிவு செய்த நாள் :
'நாங்க இருக்கோம்; நம்பி கட்டுங்க'
ராமர் கோவில் குறித்து உத்தவ்

அயோத்தி:''உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது, அனைத்து ஹிந்துக்களின் விருப்பம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்; உடனடியாக அவசர சட்டம் நிறைவேற்றி, ராமர் கோவில் கட்ட வேண்டும்,'' என, மத்திய அரசுக்கு, சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமர் கோவில்,உத்தவ்


சர்ச்சைக்குரிய நிலம்

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துஉள்ளது. இங்குள்ள அயோத்தியில், சர்ச்சைக்கு உரிய நிலம் தொடர்பான பிரச்னை, உச்ச நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,'இங்கு,ராமர் கோவில் கட்ட வேண்டும்; அதற்கு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்' என, பல ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

மஹாராஷ்டிராவில், முதல்வர்

தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி ரசில் இடம்பெற்றுள்ள, சிவசேனாவும், இதை வலியுறுத்தி வருகிறது. மஹாராஷ்டிரா சட்டசபைக்கு, இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இந்தநிலையில், அயோத்திக்கு நேற்று வந்த, சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரே, அங்கு அமைக்கப்பட்டுள்ள, தற்காலிக ராமர் கோவிலில் வழிபட்டார்.

விருப்பம்


அவருடன், அவருடைய மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் லோக்சபா தேர்தலில் வென்ற, 18 எம்.பி.,க் களும் வந்தனர்.நிருபர்களிடம், உத்தவ் தாக்கரே கூறியதாவது:கடந்தாண்டு நவம்பரில், இங்கு வந்தேன். அப்போது, லோக்சபா தேர்தலுக்குப் பிறகு மீண்டும் வருவேன் என்று கூறியிருந்தேன். அந்த பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக, தற்போது வந்துள்ளேன். அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க வேண்டும் என்பது, சிவசேனாவின் விருப்பம் மட்டுமல்ல; உலகெங்கும் உள்ள, ஹிந்துக்களின் விருப்பம்.


பா.ஜ., மற்றும் சிவசேனா, ஹிந்து மதத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுகின்றன. அதனால்தான், இந்த லோக்சபா தேர்தலில், அதிக இடங்களில் வெல்ல முடிந்தது.இதில் இருந்து, ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற மக்களின் ஆர்வம் தெரிகிறது. மக்களின் அந்த விருப்பத்தை

Advertisement

நிறைவேற்ற வேண்டியது, மத்திய அரசின் கடமை. ராமர் கோவிலை கட்டும் தைரியம், பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டுமே உள்ளது.

ஆதரவு


இது தொடர்பான வழக்கு, நீண்ட காலமாக நடந்து வருகிறது. இதற்கு மேலும் காத்திருக்க
முடியாது. இந்த அரசு நினைத்தால், உடனடி யாக அவசர சட்டத்தை கொண்டு வர முடியும்; ராமர் கோவிலை கட்ட முடியும்.அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. நாங்கள் உங்களுடன் உள்ளோம்; உலகெங்கும் உள்ள கோடிக் கணக்கான ஹிந்துக்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பர்.இதற்காக, மத்திய அரசை நாங்கள் நிர்ப்பந்திக்கிறோம் என்று எடுத்துக் கொள்ள கூடாது. ஒரு நல்லது நடப்பதற்கு, நல்ல எண்ணங்களும் தேவை.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra - plano,யூ.எஸ்.ஏ
17-ஜூன்-201916:40:27 IST Report Abuse

chakraராமர் கோவில் பிரச்சினை தீர்ந்தால் பிஜேபி யோட அரசியலும் அதோட தீர்ந்திடும் காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் கொள்கை(கொள்ளை) அடிப்படையில் எந்த வித்தியாசமும் கிடையாது

Rate this:
chails ahamad - doha,கத்தார்
17-ஜூன்-201912:39:38 IST Report Abuse

chails ahamadநடக்கின்ற கூத்துகளை கவனத்தில் கொண்டால், இந்தியாவின் நீதி பரிபாலணங்களை கேலி, கூத்துக்கு உண்டாக்கும் முழு முயற்சிகளாகும் என்பதை அனைத்து தரப்பு மக்களின் நல்லிணக்கம் விரும்புபவர்களின் கணிப்பீடுகளாகும், மொத்தத்தில் மோடி அவர்களுக்கு அவப்பெயரை உண்டாக்கும் முழு முயற்சிகளாகும் என்பதை எவராலும் மறுத்திடவும் முடியாது, அன்றைக்கும் என்றைக்கும் ஏன் இன்றைக்குமே அந்த சிவசேனாவின் உயிர் மந்திரமாகிய மராட்டியம் மராட்டியருக்கே என்ற கோசத்தை எழுப்பி அந்த மாநிலத்தில் பிழைப்பு தேடி வாழ்ந்து கொண்டு இருந்த பிற மாநிலத்தவர்களாகிய இந்துக்களையும் , இதர மதத்தவர்களையும் ஓட, ஓட விரட்டிய, விரட்டுவதில் ஆணவ வெறியுடைய சிவசேனாவினர் இன்றைக்கு இந்துக்களின் போர்வையில் நயவஞ்சக பல்லவி பாடி வருவதை மக்களனைவரும் கவனித்து கொண்டுதான் உள்ளார்கள் , பொதுவாக ஒன்றை சொல்வது என்றால் நமது நீதி பரிபாலணங்கள் கேலிக்குரியதாக மாறுவதை ஆட்சியாளர்கள் அனுமதிப்பது மக்களின் நல்லிணக்கம் சிதறுவதில் தான் போய் முடியும் என்பதை உணர்ந்தால் நல்லது .

Rate this:
PANDA PANDI - Aththipatti,இந்தியா
17-ஜூன்-201910:54:54 IST Report Abuse

PANDA PANDIஇதற்காக, மத்திய அரசை நாங்கள் நிர்ப்பந்திக்கிறோம் என்று எடுத்துக் கொள்ள கூடாது. புரியலையே உங்க பேச்சு. சட்டு புட்டு இடிக்க தெரிஞ்ச உங்களுக்கு சட்டு புட்டுன்னு கட்டத்தெரியாலேயே. இங்கதான் விஷயம் உள்ளது. மெஜுரிட்டி மாநிலத்தில், மத்தியில் இருந்து முடியலையா இல்ல வேற ச சூப்பர் திட்டம் இருக்குமோ டவுட். திருவிளையாடல்.

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X